lundi 24 mars 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

வரலாறு தந்த வழிகளைக் கண்டுணா்ந்தால்
இரவேது நெஞ்சுள் இயம்பு!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

காற்றின் மகனைக் கனிந்துருகும் வண்ணத்தில்
போற்றிப் படைத்தீா் பொலிந்து!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

கவி.சோம சுந்தரனார் கற்கண்டு சொல்லால்
புவிசேமப் பாடல் புனைந்தார்! - செவிகண்கள்
இன்பச் சிலிர்ப்பில் இளகினவே! கற்போர்தம்
துன்பம் அனைத்தும் துடைத்து!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

துன்புற்று வாழும் நெஞ்சே!
    துணிவுற்று வாழ்வை வெல்க!  
இன்புற்று வாழும் வண்ணம்
    இங்குற்ற கவியைக் காண்க!
அன்புற்று வாழும் வாழ்வே
    அவனுற்ற உலகைக் காட்டும்!
வன்பற்றுத் தமிழ்மேல் கொண்டு
    வளமுற்று வாழ்க அம்பாள்!

20.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்

மார்கழித் திங்கள் மணக்கும் பனித்துளியே!
சீா்நெறி தந்தாய் செழித்து!

20.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்!

படிக்கும் பொழுதே பசியெடுக்கும் வண்ணம்
வடிக்கும் வலையே! வணக்கம்! - துடிப்புடன்
தஞ்சம் அடைந்து சமைத்த உணவெண்ணி
நெஞ்சுள் சுரக்குதே நீா்!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

நம்பிக்கைப் பாடல் நறுங்கவி என்னுள்ளே
தும்பிக்கை செய்யும் துணை!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

இளமதிப் பாவாய்! இனியதமிழ்ப் பற்றால்
நிலமிதில் நற்போ் நிறுவு! - நலமுற
என்றன் கவிக்கலையை இங்குனக்குத் தந்திடவே
உன்றன்மின் அஞ்சலை ஓது!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

இமாவின் உலகம் இனிமை! இனிமை!
உமாதேவி காப்பாள் உனை!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்

பேரீசம் சொல்லில் பிறந்த கவிகண்டு
பாரீசு பாரதி பாடுகிறேன்! - மாரியெனச்
சீனி படைக்கின்ற சிந்தனை அத்தனையும்
தேனி படைக்கின்ற தேன்!

22.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சீராளன் வலைக்கின்று வருகை தந்தேன்!
    சிற்பியென வடித்துள்ள கவிதை கண்டேன்!
பாராளன் என்றாலும் பாவை கண்கள்
    படுத்துகிற பாடுகளைத் தாங்க வேண்டும்!
கூராளன் என்றாலும் கோதை கண்கள்
    கூறுகிற மொழிகேட்டுச் சொக்க வேண்டும்!
காராளன்! கனியாளன்! என்றே போற்றக்
    கவியாளன் ஓங்கிடுக! காதல் வாழ்க!

கைவண்ணம் கண்டு கவிவண்ணம் தீட்டுகிறேன்!
மைவண்ணன் போன்றே மனத்தைப் பறித்ததுவே!
எண்ணும் கருத்துக்கள் எற்ற எழிற்கண்டு
கண்ணும் கமழும் கனிந்து

23.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

ஆசைப் பிடியில் சிக்காதே!
        
அழிவை என்றும் எண்ணாதே!
காசைத் தேடி வாழ்நாளைக்
        
கரைத்துக் கரைத்துத் தேயாதே!
மாசை நீக்க! மண்டியுள
        
மருளைப் போக்க! ஓமென்னும்
ஓசைக் குள்ளே உன்னுயிரை
        
உருகச் செய்க! ஒளிபிறக்கும்!

23.01.2013
-----------------------------------------------------------------------------------------

7 commentaires:

 1. வணக்கம் !
  மனம் கவர்ந்த கவிப்பூக்கள் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா
  மென்மேலும் தங்களின் படைப்புக்கள் சிறந்து விளங்கட்டும் .
  த .ம .1

  RépondreSupprimer
 2. அருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

  RépondreSupprimer
 3. இன்பத் தமிழை
  கண்டு களித்தேன்
  ஆசை தீர
  உண்டு களித்தேன்...!

  RépondreSupprimer
 4. all poems are amazing.

  அருமையான சிந்தனை ஐயா!

  this is my blog....

  http://pudhukaiseelan.blogspot.com/

  RépondreSupprimer
 5. இன்பத் தமிழ்
  இனிய தமிழ்
  இனிமை...

  RépondreSupprimer
 6. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

  RépondreSupprimer
 7. என்றன் வலையில் எழிலான உம்கவிகள்
  நன்றுணர்த்தி விட்டதிங்கே நாயகனே - பொன்போல
  புத்தொளிரும் நற்றமிழின் புல்லாங் குழலிசையாய்
  எத்திக்கும் வெல்லும் எழுத்து !

  நண்பர்களின் வலையெங்கும் பூத்த கவியெல்லாம் நலமுறவைக்கும் எந்நாளும் .....இனிய கவிதைகள் கவிஞரே
  இனிய வாழ்த்து வாழ்க வளமுடன் 8

  RépondreSupprimer