சொல்லோவியம்
81.
காற்றாடி பறப்பதுபோல்
கற்பனையைக் கூட்டாதே!
ஊற்றாடிக் குதிப்பதுபோல்
உணர்வுகளை ஊட்டாதே!
82.
மன்னாதி மன்னவனே!
மாசில்லாத் தென்னவனே!
பொன்னாக என்மீது
பொலிகின்ற புண்ணியனே!
83.
பூப்போட்ட சட்டையிலே
பூவையெனை மடக்கனையே!
நாப்போட்ட புதிருக்கு
நல்லபதில் படைத்தனையே!
84.
கதர்ச்சட்ட போட்டுவந்து
கன்னியெனைக் கலக்கினியே!
பதராகப் பறந்திடவே
பருவத்தை உலுக்கினியே!
85.
பச்சைநிறச் சட்டையிலே
பாவையெனை விழுத்தரையே!
அச்சுவெல்லம் போல்முகத்தில்
முத்தத்த அழுத்தரையே!
86.
நீலநிறச் சட்டையிலே
நெஞ்சத்தை நசுக்கிரியே!
காலமெல்லாம் என்னழகைக்
கனியாகப் புசிக்கிரியே!
87.
ஊதாப்பூச் சட்டையில
உள்ளத்தை உடைக்கிரியே!
ஆதாமாய் ஏவாலாய்
ஆகிடவே அழைக்கிரியே!
88.
காவிநிறச் சட்டையில
கருணைமணம் பொழிகிறையே!
தேவியெனத் தேவியெனத்
தேய்ந்துமனம் வழிகிறையே!
89.
கத்தரிப்பூச் சட்டையில
காந்தமென இழுக்கிறையே!
அத்திமர அணிலாக
அழகாத்தான் முழிக்கிறையே!
90.
மஞ்சநிறச் சட்டையில
மஞ்சத்தை விளைக்கிறையே!
கொஞ்சுதமிழ்ப் பாட்டாலே
கோதையெனை அளக்கறையே!
(தொடரும்)
அழகான ரசிக்க வைக்கும் சட்டைகள்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
சட்டை நிறங்கண்டு பட்டை அடித்ததுபோல்
மட்டையாய் ஆகம் மனம்
சொல்லோவியம் அருமை ஐயா
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கரந்தையார் வந்து கவித்தமிழ் நல்கும்
விருந்தைச் சுவைத்தார் விழைந்து!
வணக்கம் !
RépondreSupprimerஆக்கமும் ஊக்கமும் அளிக்கும்
அருமையான சொல்லோவியம் கண்டு மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள் ஐயா .த.ம .5
Supprimerவணக்கம்!
ஆக்கமும் ஊக்கமும் அள்ளி வழங்கியெனைக்
காக்கும் தமிழே!என் காப்பு!
அழகான ரசிக்க வைக்கும் சட்டைகள்...
RépondreSupprimer