jeudi 15 août 2013

சுதந்திர திருநாள் வாழ்த்து!



சுதந்திர திருநாள் வாழ்த்து

சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
இதந்தரும் வாழ்வில் இனித்து!

சுதந்திர நன்னாளைச் சூடி மகிழ்வீா்!
விதந்தரு இன்பம் விளைப்பீா்! - மதந்தரும்
போதை ஒழிப்பீா்! புகழ்தரும் நன்மனிதப்
பாதை படைப்பீா் படா்ந்து!


7 commentaires:

  1. இனித்த சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள்..!!

    RépondreSupprimer
  2. மிகமிக அருமையாக வெண்பாவில் வாழ்த்தினீர்கள் ஐயா!
    குறளும் இனிமை!.

    சுதந்திர திருநாள் வாழ்த்து என்பதில் வாழ்த்து மறைவில் உணர்த்தும் செய்தி புரிகிறது.
    காலம் வர விலகும் துயரத்தனையும்.

    இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  3. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! அருமையான வாழ்த்துப்பாடல் பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
  4. மதந்தரும்
    போதை ஒழிப்பீா்! புகழ்தரும் நன்மனிதப்
    பாதை படைப்பீா் படா்ந்து!//
    நன்றாக இருக்கிறது கவிதை.

    இனிய சுதந்தி தின வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  5. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  6. உங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் ஐயா!

    RépondreSupprimer
  7. இனிய விடுதலை நாள் விழா வாழ்த்துக் கண்டு மகிழ்ந்தேன் அய்யா.
    தாங்கள் எனது வலையின் திருக்குறளில் தளைப்பிழையில்லை, பாடபேதம் உண்டு எனும் எனது கட்டுரைக்கு இட்டிருந்த பின்னூட்டத்தில், எனது தகவல் பிழையொன்றைத் திருத்தியமைக்கு நன்றி தெரிவித்து அதே கட்டுரையில் அந்தத் தகவல் வரும் இடத்திலேயே திருத்தி வெளியிட்டிருக்கிறேன் (பின்னர் வருமிடங்களில் திருத்துவதை விட அந்த இடத்திலேயே திருத்திவிடுவதே சரியென்றே அவ்வாறு செய்தேன்)
    தங்களிடமும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா. நன்றி.
    எனது கட்டுரைப் பின்னூட்டத்தில் தாங்கள் எழுதியிருந்ததற்கேற்ப, வெண்பாவில் ஆய்தம் பற்றிய தங்கள் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    குறிப்பிட்ட அந்த 4குறள்களின் ஆய்த எழுத்துகளும் பாடபேதம்தான் என்னும் என் கருத்து, தங்கள் கட்டுரையால் மாறுமெனில் நான் மகிழவே செய்வேன்.
    வணக்கம். தங்கள் நட்புள்ள,
    நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
    பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2013/08/blog-post_5.html

    RépondreSupprimer