mardi 6 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 116]




காதல் ஆயிரம் [பகுதி - 116]


961.
முத்தப் பதிவுகளால் சித்தம் களித்திடுவோம்!
நித்தம் அளித்து நெகிழ்ந்திடுவோம்! - கத்துக்
கடலோரம் கை..கோர்த்துக் காதல் படிப்போம்!
உடலூறும் ஆசை உரைத்து!

962.
தலைக்கனம் ஏனோ? கலைமனப் பெண்ணே?
அலைமனம் ஏனோ? அழகே! - நிலையாய்
மனத்தை நிறுத்திடுவாய்! மாசகற்றி, காதல்
மணத்தைக் கொடுப்பாய் மலர்ந்து!

963.
வளநதி பாயும் மலர்வனம்போல் என்றன்
உளநதி பாயும் உயர்ந்து! - நலநிதி
என்றன் தமிழ்ப்பாக்கள்! என்னவளே! எந்நாளும்
உன்றன் உறவமுதை ஊட்டு!

964.
கண்ணென வந்தவனே! காதல் கவிதைகளை
விண்ணென நெஞ்சுள் விளைத்தவனே! - தண்டமிழால்
பொன்னென மின்னும் புகழ்க்கவியே! உன்னெழுத்தை
என்னெனச் சொல்வேன் எடுத்து!

965.
தண்டமிழ் யாப்பைத் தகையுடன் கற்றுணர்ந்து
பண்டமிழ் பாடிப் பணிபுரிந்தாய்! - வண்டமிழைக்
கொண்டாட வைத்தாய்! குளிர்ந்த தமிழழகில்
திண்டாட வைத்தாய் தினம்!

(தொடரும்)

6 commentaires:

  1. முத்தப் பதிவுகளால் சித்தம் களித்திடுவோம்!//உண்மைத்தானுங்க அய்யா.

    RépondreSupprimer
  2. இன்தமிழ்ப் பாக்களாய் இங்குள யாவுமே
    செந்தமிழ்ச் சீராம் செழித்து!

    மிக அருமை அனைத்தும்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  3. நீங்கள்...

    தண்டமிழ் யாப்பைத் தகையுடன் கற்றுணர்ந்து
    பண்டமிழ் பாடிப் பணி புரிகின்றீர்கள்!

    உங்கள் பாக்களைக் உண்டு களிக்கும் எங்களை நீங்கள் -

    குளிர்ந்த தமிழழகில்
    திண்டாட வைக்கின்றீர்கள் தினம்!

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  4. வணக்கம்
    ஐயா

    என்னவளே! எந்நாளும்
    உன்றன் உறவமுதை ஊட்டு!
    மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  5. முத்தப் பதிவுகளால் சித்தம்.... அருமை...
    உங்கள் பாக்கள் தேன்பாகாய் இனிக்கின்றன ஐயா..

    RépondreSupprimer
  6. முத்தப் பதிவுகள் மொத்தமும் தமிழின் இனிமை பதிவு அருமை

    RépondreSupprimer