jeudi 29 août 2013

கனிகளைத் தின்பான்




கனிகளைத் தின்பான்

எடுப்பு

முத்துக் குமரன் வருவான் - காதல்
மோகம் நெஞ்சில் தருவான்!
                                       (முத்து)
தொடுப்பு

கத்தும் குறவன் வருவான் - இன்பம்
கட்டி அணைத்துத் தருவான்!
                                       (முத்து)
முடிப்புகள்

மயில்மேல் வேலன் திரிவான் - மங்கை
மணத்தை நன்றே அறிவான்!
குயிலாய் இசையை அளிப்பான் - என்
கோபம் நீக்கிக் களிப்பான்!
                                       (முத்து)
சிந்தை மகிழச் செய்வான் - தலை
சீவி முடியப் பாய்வான்!
கந்தன் கனியைத் தின்பான் - என்னைக்
கண்ணே மணியே என்பான்!
                                       (முத்து)

17.08.1983 

2 commentaires:

  1. வணக்கம், முத்து முத்தான வரிகள், மகிழ்ச்சி

    RépondreSupprimer
  2. ரசித்தேன் ஐயா!

    பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer