samedi 24 août 2013

விழியும் மொழியும்!




விழியும் மொழியும்

அவள்விழி கதைகள் சொல்லுமே - உளத்தில்
ஆசையாம் அலைகள் துள்ளுமே!
அவள்மொழி மனத்தைக் கிள்ளுமே - இந்த
அவனியை முழுதும் வெல்லுமே!

மீன்விழி அசைவில் நெஞ்சமே - அது
மீட்டிடும் இசையில் தஞ்சமே!
தேன்மொழி எதையும் விஞ்சுமே - பூந்
தென்றலே அவள்பால் கொஞ்சுமே!

மலர்முக அழகு போதுமே - மயக்கும்
மைவிழி உயிரை மோதுமே!
நிலவது பார்க்க ஏங்குமே - அவளை
நினைத்திட இன்பம் பொங்குமே!

11.07.1983 

10 commentaires:

  1. //மலர்முக அழகு போதுமே - மயக்கும்
    மைவிழி உயிரை மோதுமே!//
    மையல் கொள்ளவைக்கும் வரிகள்...

    RépondreSupprimer
  2. வணக்கம
    ஐயா
    மலர்முக அழகு போதுமே - மயக்கும்
    மைவிழி உயிரை மோதுமே!
    நிலவது பார்க்க ஏங்குமே - அவளை
    நினைத்திட இன்பம் பொங்குமே!
    என்ன வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. // மலர்முக அழகு போதுமே - மயக்கும்
    மைவிழி உயிரை மோதுமே!
    நிலவது பார்க்க ஏங்குமே - அவளை
    நினைத்திட இன்பம் பொங்குமே!//

    அழகு வரிகள்...

    RépondreSupprimer
  4. உங்களது வரிகளில் மனமும் தஞ்சமே...

    வாழ்த்துகள் ஐயா.... நன்றி...

    RépondreSupprimer
  5. நிலவது பார்க்க ஏங்கும்
    விழியும் மொழியும் அழகு..!

    RépondreSupprimer
  6. விழிமொழியை
    மொழிவழி சொன்னவிதம் மிகவும் அருமை
    ரசித்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  7. பச்சைக் கிளிமொழி பாடும் அவள்விழி
    மெச்சிட மேன்மை மிகும்!

    RépondreSupprimer
  8. கத்தியின்றி யுத்தமின்றி
    வெல்லுதோ விழியும் மொழியும்..:)

    அழகு! அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer