dimanche 11 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 121]




காதல் ஆயிரம் [பகுதி - 121]

986.
கூட்டில் கிளியிரண்டு கொஞ்சிய காட்சியை
ஏட்டில் எழுதி இசைக்கின்றேன்! - வீட்டில்
இருந்தாலும் எங்கோ பறக்கின்றேன்! என்னை
இருந்(து)ஆளும் பெண்ணின் எழில்!


987.
பாடும் குயிலும்..நீ! பச்சைக் கிளியும்..நீ!
ஆடும் மயிலும்..நீ! அன்னம்..நீ! - கூடுபுகழ்
சூடும் தமிழும்..நீ! ஓடும்தேன் ஆறும்..நீ!
ஏடும்..நீ என்பேன் எனக்கு!

988.
இனமுயர! இன்பத் தமிழுயர! நன்றே
மனமுயர! நம்வாழ்(வு) உயர! - வனமாய்த்
தினமுயர நீ..தீட்டும் செந்தமிழ்ப்பா கேட்டுத்
தனமுயர ஏங்கும் தலை!

989.
சுளையாக ஊறிய சொற்களைச் சீர்வெண்
டளையாகப் பாடும் தமிழா! - கலையாய்த்
தினமெழுதும் திவ்விய பா..படித்து உன்னை
மனமுழுதும் வைத்தேன் மகிழ்ந்து!

990.
திண்ணை மணக்கத் திருமஞ்சள் நீர்தெளித்துப்
பண்ணை இளமோலை பாய்கொடுத்து! - வண்ணமுடன்
என்னை அமர்த்தி எழிற்செய்தார்! என்னென்பேன்
உன்னை நினைக்கும் உயிர்!

(தொடரும்)

7 commentaires:

  1. திண்ணை மணக்கத் திருமஞ்சள் நீர்தெளித்து

    அருமை ஐயா. ஆனால் இன்றோ வீட்டில் திண்ணை என்பதே இல்லாத நிலை.

    RépondreSupprimer
  2. இனமுயர! இன்பத் தமிழுயர! நன்றே
    மனமுயர! நம்வாழ்(வு) உயர! - வனமாய்த்
    தினமுயர நீ..தீட்டும் செந்தமிழ்ப்பா கேட்டுத்
    தனமுயர ஏங்கும் தலை!

    ஐயா! எம் இனமும் மொழியும் வாழ்வும் நிச்சயம் சிறக்கும் உங்கள் கவியால்..!

    ரசிக்கின்றேன்!
    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  3. ஆமாம் ஐயா! இனமும் மொழியும் உயர வாழ்வும் உயரும்!

    உங்கள் அரிய தமிழ்ப்பணியால் எங்கள் தமிழினமே உயரும். இது திண்ணம்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  4. பாக்கள் அருமை...
    இன்னும் பத்தில் 1000 தொட இருக்கிறீர்கள்...

    வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. இனமுயர! இன்பத் தமிழுயர! நன்றே
    மனமுயர! நம்வாழ்(வு) உயர! - வனமாய்த்
    தினமுயர நீ..தீட்டும் செந்தமிழ்ப்பா கேட்டுத்
    தனமுயர ஏங்கும் தலை!

    அழகிய பா

    வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்க வளமுடன்
    த ம:- 7

    RépondreSupprimer