samedi 20 avril 2013

வாடிக் கிடக்குதடி



வாடிக் கிடக்குதடி

என்மேல் ஏனோ - இன்னும்
இரக்கம் இல்லையடி!
உன்மேல் ஆசை - இரவில்
உறக்கம் இல்லையடி!

உன்னைப் பாரா(து) - இந்த
உலகம் வெறுத்ததடி!
என்றன் ஏக்கம் - நாளும்
என்னை அறுத்ததடி!

நிலவாய் நெஞ்சம் - உன்றன்
நினைவில் தேய்ந்ததடி!
மலராய் உள்ளம் - தரையில்
வாடிக் கிடக்குதடி!


18 commentaires:

  1. அற்புதமான கானம். ஆச்சரியப்படவைக்கும் சந்தங்கள்.
    சங்கதிகள்.
    க்ளாசிகல் இசை ராகம் முகாரியில் அதன் வரைக்குள் சரியாக‌
    துல்லியமாக அமைகிறது.

    நானும் பாடுவேன்.
    உங்களுக்கு அனுப்பவேன். உங்கள் இ மெயில் ஐ.டி. ?

    சுப்பு தாத்தா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நற்சுப்பு தாத்தாவின் நல்லிசை எந்நாளும்
      கற்கண்டு அளிக்குமே காண்!

      Supprimer
  2. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே
    என மனம் ஏங்கியது நிஜம்
    எளிமையான வார்த்தைகளில்
    மனம் அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஈரெட்டு இளமையில் தீட்டிய பாட்டிதைச்
      சீா்தொட்டுத் சொன்னீா் செழித்து!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      தண்மனப் பாட்டுக்குத் தந்தீா் தமிழ்மணம்!
      பண்மனம் பாடும் பறந்து!

      Supprimer
  4. வணக்கம் ஐயா !
    வாடிடும் மனமது தேறிட இன்பம்
    கூடிட வேண்டும் இவ்விடத்தில் என
    வாழ்த்துரைத்தேன் இனிய கவிதைகள்
    இனியும் தொடரட்டும் .....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்கும் பொழுதில் கனிந்த கவிதைக்குப்
      பொற்புடன் தந்தீா் புகழ்!

      Supprimer
  5. மிக மிக அருமையான கவிதை. ரொம்ப ரசித்தேன்.
    வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!.....

    அழகிய பாக்களில் ஆதங்கம் சொல்லிய
    கவிஞர் கற்பனை கருதிடக்கூடுமோ
    வாடியமனதை பாடியபாக்கள்
    கூடியஇனிமையும் மென்மையுமாமே...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாடும் மனத்தை வளமுறச் செய்யுமே
      பாடும் இளமதி பாட்டு!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      அரும்தம்பி சே.குமார்! அந்தமிழை உண்ண
      வரும்தும்பி என்பேன் மகிழ்ந்து!

      Supprimer
  7. நினைவில் தேய்ந்த நிலவு..

    தரையில்வாடிக் கிடக்கும் மலராய் உள்ளம்

    அழகாய் ஆனந்தக் கவிதை ..! பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாடும் மலராய் வதங்கிய உள்ளத்தைச்
      சூடும் கவித்தேன் சுரந்து

      Supprimer
  8. நீங்க உண்மையை சொல்லிடீங்க என்னால சொல்ல முடியலையே?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொல்லாத காதலும் நற்சுகமே! என்தோழா
      பொல்லாத ஐயத்தைப் போக்கு!

      Supprimer
  9. நிலவாய் நெஞ்சம் - உன்றன்
    நினைவில் தேய்ந்ததடி!
    மலராய் உள்ளம் - தரையில்
    வாடிக் கிடக்குதடி!
    //அருமையான வரிகள்! மிகவும் இரசித்தேன்! என்னுடைய வலைப்பூவில் அணைத்திட வருவாளோ? எனும் கவிதை படைத்துள்ளேன். தங்களின் வருகை மகிழ்வளித்தது! தாங்கள் என்னுடைய வலைப்பூவில் "கிளிப்பேச்சு கேட்போமே" எனும் பதிவிற்கு இட்ட கருத்துரையை தவறுதலாக என் மனைவி நீக்கிவிட்டார். மன்னிக்கவும். முடிந்தால் தாங்கள் வருகை தர விழைகிறேன்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகையை வாழ்த்தி வரவேற்றே என்றன்
      இருகை குவியும் இணைந்து!

      Supprimer