மதி நாணுமே?
எடுப்பு
நெஞ்சம் துடிக்குதடி - உன்
நினைவு சிறக்குதடி !
(நெஞ்சம்)
தொடுப்பு
மஞ்சம் மணக்குதடி - என்
மனத்தை மயக்குதடி
(நெஞ்சம்)
முடிப்பு
கற்கண்டு கனிச்சாறே - உன்
கயல்விழி எனைக்கொல்லுமே!
நற்றமிழ் மதுக்குடமே - உன்
நன்மொழி எனைவெல்லுமே!
(நெஞ்சம்)
கற்பனைக் காவியமே - உன்
காதலே நிதியாகுமே!
அற்புத ஓவியமே - உன்
அழகினில் மதிநாணுமே!
(நெஞ்சம்)
02.05.1985
02.05.1985

ரசித்தேன் அய்யா...!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வண்ணத் தமிழில் வடித்த மதியழகில்
எண்ணம் மயங்கும் இனித்து!
மதி மயங்குகிறதே ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
மதிமயக்கும்! நம்மின் மதிமயங்கும்! பாட்டில்
நதிநடக்கும்! நன்மை நவின்று!
RépondreSupprimerவணக்கம்!
மதியழகைக் கண்டு வடித்த கருத்துள்
மதியமுதை உண்ணும் மகிழ்ந்து!