lundi 1 avril 2013

திருப்பாதம்





திருப்பாதம்

தாமரை இதழோ?
தண்கொடி இலையோ?
பவளத்தின் உறவோ?
பஞ்சியின் தாயோ?
பாவையுன் பொற்பாதம்!

வணங்கும்
பொன்மகள் திருவடியோ - என்
மூளையை ஆளும்!
மயக்கும்
என்னவள் எழிலடியோ - கவிச்
சாலையை ஆளும்!

புல்வெளியில்
அவள் நடந்தால்
புல்களுக்கும் புல்லரிக்கும்!
அவள் திருவடியைச்
சுக ஒற்றடமாய்
அவை நினைக்கும்!

பாதம் பட்ட
இடமெல்லாம்
பசுமை தழைக்கும்!
பாதச் சுவடுகளின் மேல்
நடந்துவர
ஆசை அழைக்கும்!

அவள் முகத்தைவிட
அவள் அகத்தைவிட
அவள் திருவடியே பேரழகு!

அவள் திருவடியின்
சந்தம்!
என் கவியடிகளின்
சொந்தம்!

மலர்க் கூட்டங்கள்
தலைவணங்கின!
மங்கையின்
மலரடியைக் கண்டு
மனமயங்கின

தண்ணீா்க் குளம்!
அவள் கால்கள் படப்
பன்னீா்க் குளம்!

மீன்கள் 
தேன் அருந்தும்!
அவள் கரையேறினால்
அவை வருந்தும்! 

அவள் திருவடியில்
கொலுசாக இருக்க ஆசை! 
கொலுசொலியே
என்னுயிரின் ஓசை!

இராவணன்
தன்னிணை கூடலிலும்
மனைவியின்
தாள்களைக் காணாதவன்!

நானும் வீரத்தில்
இராவணன்தான்!
உலகம் என்னைத்
தூற்றினாலும்
கோடிப் பலகோடி
முத்தங்களை
என்னவளின் 
பாதங்களில் பதிக்கின்றேன்!

01.04.2013

4 commentaires:

  1. /// தண்ணீர்க் குளம்!
    அவள் கால்கள் படப்
    பன்னீர்க் குளம்! ///

    பாத ரசனையில் மூழ்கி விட்டேன் ஐயா...

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      பொன்மலா்ப் பாதங்கள் போகும் வழியாவும்
      நன்மணம் வீசுமே நன்கு!

      Supprimer

  2. வணக்கம்!

    பெண்ணின் திருவடியைப் பேணும் கவிபடித்தால்
    கண்ணிற் கமழும் கனவு!

    RépondreSupprimer
  3. பாதத்திற்கும் பாவியற்றிய பாவலரே உங்கள்
    பாக்கள் அவள் பாதத்தில் பதிந்திடப்பெற்ற
    பேறதனை என்னவென பேசுவது உங்களுக்கு
    மாறு என்செய்வதென மாதவள் மருகுகிறாளே...

    RépondreSupprimer