முல்லைக் காடே
பூந்தமிழ்ப் புகழைப் பாடு - அதற்குப்
புவியினில் ஏதிங்(கு) ஈடு!
பைந்தமிழ்த் தேனைப் பருகு - சந்தப்
பாவினில் உள்ளம் உருகு!
வண்டமிழ் வண்ணப் பாக்கள் - மனம்
மயக்கிடும் வைரப் பூக்கள்
ஒண்டமிழ் அழகே அழகு - உலகில்
உயர்கவி எழுதப் பழகு
முத்தமிழ் முல்லைக் காடே - அதில்
மொய்த்திடும் இன்பம் நீடே!
நித்தமும் என்றன் தாயே - என்
நினைவினில் இருப்பாய் நீயே!
1.1.1980
தமிழ் முல்லை அழகு
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
முல்லைமலா்க் காடு முகிழ்த்த அழகணிந்து
எல்லையிலா இன்பத்தை ஏந்து!
ஒண்டமிழ் அழகே அழகு - உலகில்
RépondreSupprimerஉயர்கவி எழுதப் பழகு//
கவிஎழுதும் ஆசையை தூண்டிவிடும் வரிகள் அருமை
Supprimerவணக்கம்!
ஒண்டமிழ்த் தாயின் உயரடியை உள்பதித்தால்
உண்டமிழ் இன்பம் உனக்கு!
ஐயா...
RépondreSupprimerமுல்லைக்காடே அருமையாக உள்ளது. எண்பதாம் ஆண்டில் எழுதிய பாவிது. இன்றும் அதன் இனிமையும் அழகும் இனிக்கிறது.
ஐயா இப்படியான கவிதைகள் எந்தவகைப் பாக்கள் என அறியலாமா?
எவ்வகையாயினும் அததற்கு உள்ள விதிகள் என்ன விபரங்களை அறிந்து பயின்று எழுத ஆவலினால் கேட்கின்றேன்.
நீங்கள் தரும் அருமையான பாக்களால் எமக்கும் அதைச்சீராகக் கற்று எழுதும் ஆவல் அதிகமாகிறது.
பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
த ம.3
Supprimerவணக்கம்!
அள்ளி அருந்துக! அந்தமிழ்ப் பாட்டியலைச்
சொல்லித் தருவேன் தொடா்ந்து
ஒண்டமிழ் அழகே அழகு - உலகில்
RépondreSupprimerஉயர்கவி எழுதப் பழகு...
ஐயா தங்கள் வரிகளை படித்தவுடன் எங்களுக்கும் இப்படி எழுத வருமா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது. அருமை அருமை.
Supprimerவணக்கம்!
சித்திரம் கைப்பழக்கம்! செந்தமிழ் நாப்பழக்கம்!
முத்திரை காண்பாய் முயன்று!
அழகு... அருமை...
RépondreSupprimerரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...
அழகான வரிகள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
இமாவின் வருகை! இனியதமிழ் என்பேன்!
உமாவதி தந்த ஒளி!
இனிமையான கவிதை..... ரசித்தேன்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வெங்கட் வருகையால் வெல்லும் கவிதைகள்
பொங்கும் எனக்குள் பொழிந்து!
t:m:6
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நல்லாறு வாக்குகளைத் தந்தவா்க்கு என்னன்றி!
பல்லாண்டு வாழ்க பயின்று
அழகான கவிதை.தொடர்ந்து கலக்குகிறீர்களே
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பாரதியைக் கண்டுநான் பக்தியுடன் வாழ்த்துகிறேன்
சீரெலாம் காண்க செழித்து!
RépondreSupprimerவலைத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
முல்லையெழில் கண்டு மொழிந்த கருத்துக்கள்
மல்லையெழில் தந்த மணமென்பேன்! - சொல்லையெழில்
மேவக் கவிபாடிக் மேன்மை விளைக்கும்!நான்
கூவும் கவிதைக் குயில்!
நாவில் தமிழின் நடை!