dimanche 21 avril 2013

தமிழே... உயிரே...

கவிஞா் கி. பாரதிதாசனின்
தமிழிசை பாடல்கள்


1. தமிழே எங்கள் உயிரின் இருப்பு
2. மாந்தருள் மாணிக்கம் வடலுாரார்
3. ஆசை முகம் மெல்ல மெல்ல மின்னுது
4. காதல் பெருகுதடி
5. கண்போல மொழிபேண வேண்டும்
6. திருராம கதைபாடி
7. தமிழா! நித்திரை கிழித்துவா!
8. வண்ணத் தமிழே வந்தாடு
9. மண்ணை இழந்து மனையைத் துறந்து


20 commentaires:

  1. ஐயா!...
    ஒலிவட்டின் பாடல்கள் அத்தனையும்இனிமையாக இருக்கிறது .
    உங்களின் பாக்கள் மிக உணர்ச்சிமிக்கனவாய், காதல்கவியாக மென்மையான சுவைதருவதாய் அழகாக இருக்கிறது. அத்தனையும் அருமை. முழுவதையும் கேட்டுவிட்டு இதனை எழுதுகிறேன்.

    பாடியிருப்பவரும் பக்கவாத்தியம் வாசிப்பவர்களும் அருமையாக தம்பணியைச் செய்துள்ளனர்.

    மொத்தத்தில் மிக அருமையான சிறப்பான ஒலிப்பேழை. எமக்கும் கேட்க இதனை பகிர்வுசெய்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா!

    இதனை விலைக்கு வாங்க விருப்பமுள்ளேன். அப்படியாயின் எப்படி வாங்கலாம் என்பதை அறியதாருங்கள். மிக்க நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல தமிழிசை நன்றே ஒலித்திட
      வல்ல கவிநான் வழிசெய்தேன்! - தொல்லுலகில்
      அன்னைத் தமிழோங்க ஆழ்ந்து பணிசெய்வேன்!
      முன்னைப் புகழைப் மொழிந்து!

      Supprimer
  2. இந்த குறுந்தகட்டில் அடங்கியுள்ள அத்தனைப் பாடல்களும் அருமை.மேலும் பல கேட்க ஆவலாய் உள்ளேன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவியாழி தந்த கருத்திற்கே இந்தப்
      புவியாழி ஒப்போ புகல்!

      Supprimer
  3. முதலிரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன்
    தொடர்ந்து கேட்க புக் மார்க் செய்து கொண்டேன்
    கவிதை வரிகளும் இசையும் ஒலிப்பதிவும்
    மிக மிக அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      இன்பத் தமிழிசையை ஏந்தும் மனத்துக்குள்
      துன்பம் இலையெனச் சொல்லு!

      Supprimer
  4. Réponses

    1. வணக்கம்!

      தமிழிசை கேட்டுத் தமிழ்மணம் தந்தீா்!
      இமயப் பரிசாம் எனக்கு!

      Supprimer
  5. தமிழிசையோடு,
    தமிழ்ப் பா
    அருமை அய்யா
    நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்ப்பா படைத்தேன்! தமிழா் மகிழ
      அமிழ்ப்பா படைத்தேன் அருந்து!

      Supprimer
  6. கவிஞா் கி. பாரதிதாசனின்
    தமிழிசை பாடல்கள்
    இனிய தமிழிசை
    அருமையாய் பெருமை சேர்த்தது
    அன்னை தமிழுக்கு ..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தாமரைப் பெண்மணி தந்த கருத்தினை
      மாமறை என்பேன் மகிழ்ந்து!

      Supprimer
  7. அழகு தமிழில் அமிர்தமாக அமைதியான சூழலில் கேட்க இதமான பாடல்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமைத் தமிழின் அமுதைப் பருகிப்
      பெருமை உரைத்தீா் பெருத்து!

      Supprimer
  8. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திண்டுக்கல் ஊா்ப்பெயரைத் தீட்டும் தனபாலா்
      கண்டுச்சொல் தீட்டும் கவி!

      Supprimer
  9. அருமை.. கேட்பதற்கினிமை..!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய தமிழிசையை எங்கும் பரப்பு!
      கனியும் புகழோ கடல்!

      Supprimer
  10. அய்யா, எப்படி உள்ளீர்கள்? இடையில் தங்களை சந்திக்க இயலவில்லை. நலம் தானே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நலமாய் இருக்கின்றேன்! நற்றமிழ்த் தொண்டில்
      வளமாய் இருக்கின்றேன்! வாழ்த்து!

      Supprimer