விருத்த மேடை - 90
சந்தக் கலிவிருத்தம் - 7
தந்தன தந்தன தந்தன தந்தா
[எல்லாச் சீர்களும் 4 சந்த மாத்திரை]
வெள்ளியை ஆத[ல்]வி ளம்பினை மேலோர்
வள்ளியர் ஆகி[ல்]வ ழங்குவ தல்லால்
எள்ளுவ என்சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீதுகொ டுப்பது நன்றால்
[கம்பன், பால.வேள்வி - 28]
எல்லாச் சீர்களும் 4 சந்த மாத்திரையைப் பெற்றன. முதல் மூன்றிடங்களில் தந்தன, தானன, தாந்தன என்ற சீர்கள் வரலாம். அடியின் முதலில் தனதனவும் வரும். இறுதியில் தாந்த, தான, தானா, தன்ன ஆகியனவும் இவை இறுதியில் ஒற்றுப் பெற்றவையும் வரலாம். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.
வன்மலை ஒற்றுமை என்மன மேற்றே
துன்மலை துாள்படு[ம்] தொன்னெறி காத்தே!
நன்மலை யாப்பினை நல்லிசை ஆண்டே
இன்மலை கொண்டிடு[ம்] மின்கவி வாழ்வே!
[பாட்டரசர்]
மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
26.02.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire