mardi 16 juillet 2019

மயில் பந்தம்


மயில் ஓவியக் கவிதை
  
இன்பநல் லாட்ட மிடுமே! மனமே! இசைமயிலே!
உன்..தலை கண்வெகு பொன்னார் கலையொளி சீதனமே!
மின்னும் வடிவே! வினைதீர்!சேண் சேர்வேன்!சீர் வெல்லழகே!
கன்சுவை யாழ்..கவி மேவி..நீ! வான்யாப்பில் வாழ்கநீடே!
  
சேண் - இறையுலகம்.
கன் - கற்கண்டு
  
கருத்துரை:
  
இசைந்தாடும் மயிலே! நீ தோகை விரித்தாடும் நடனம் கண்டு என்மனம் மயங்கி ஆடும். உன்னுடைய தலையும் கண்ணும் நிறைபொற்கலையின் சொத்தாகும். மின்னும் அழகே! என்னுடைய வினையைத் தீர்ப்பாய். நானும் உன்போல் இறையுலகில் வாழ்வேன். சீரழகே! வெல்லழகே! கற்கண்டு சுவையுடை என்றன் கவிதையில் மேவித் தமிழ் யாப்பில் நிலைத்து வாழ்க!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire