தமிழ் உறவுகளே வணக்கம்!
தாயகப் பயணம் எண்ணிய வண்ணம் சிறப்புடன் அமைந்தது
புதுக்கோட்டையில் இயங்கும் பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்திய
இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "ஏக்கம் நுாறு" "கனிவிருத்தம்" என்னும் கவிதை நுால்களை இயக்குநா் திலகம் கே. பாக்யராசு அவா்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார்
வணக்கம் அய்யா .உங்களது நூல்களை எங்கள் ஊரில் வெளியிட்டது குறித்து நாங்கள் மிகுந்த பெருமை கொள்கின்றோம் .வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாய் உங்களிடம் நாங்கள் பயின்ற காலங்கள்...மிக்க நன்றி அய்யா...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா
RépondreSupprimerதம 2
வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerஉங்களை சந்திக்க முடியவில்லையே எனும் வருத்தம் இன்னும் இருக்கிறது ஐயா...
RépondreSupprimerதங்களைச் சந்திக்க இயலாத வருத்தம் இன்னும் மாறவில்லை அய்யா. அடுத்த முறை வரும்போது, அன்பு கூர்ந்து முன்கூட்டிய திட்டமிடுதலோடு (புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் அனைவரையும் சந்திக்க வாய்ப்பாக) வர வேண்டுகிறேன். எனினும் தாங்கள் தொலைபேசியில் பேசியது மகிழ்வளித்தது அய்யா. நன்றி வணக்கம்.
RépondreSupprimerஐயாவணக்கம், இம்முறை தங்களின் மாணவியாக தொடர்கிறேன்
RépondreSupprimerதமிழ் பற்று தங்களை பசிமறக்கச்செய்ததைப்பார்த்தோம் அப்பாவும்
தாங்களும் எழுதும் கவிதைகளைஒருவருக்கொருவர் பரிசீலித்துக்
கொள்வதுகேட்டுசற்று பொறாமையாகத்தான் இருந்ததுஅந்த நான்ங்கு
மணிநேரம் எங்களுக்காக ஒதுக்கியது எங்களதுபாக்யம்மிக்க நன்றிஐயா.
வணக்கம்.
RépondreSupprimerவாழ்த்துக்கள் கவிஞர்.
RépondreSupprimerஎட்டுத் திசைகளிலும் இன்பத் தமிழொலியைக்
கொட்டும் முரசே! குளிர்நிலவே! - கட்டுமலர்
வீசு மணமாக விந்தைக் கவிதைகளைப்
பேசு! பொழிலெனப் பூத்து!
வணக்கம் !
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா ! வாழ்வில் இது போன்ற ஒரு தருணத்திற்காக காத்துக்
கிடக்கும் நெஞ்சங்களில் என்றென்றும் தாங்கள் வாழ்வீர்கள் .கடுமையான
உழைப்பும் ஆற்றலும் நிறைந்த தங்களிற்கு இறைவன் வழங்கிய நல்லாசியினால்
இந்த இன்பமான தருணம் அமைந்துள்ளது என நான் எண்ணுகின்றேன் இதனைக்
காணும் போது உள்ளம் மகிழ்வின் உச்சிக்கே செல்வதையும் நான் உணர்கின்றேன் .
தங்களின் மாணவியாக இந்த ஜென்மத்தில் நானும் இருப்பதை இட்டு அளப்பெரிய
மகிழ்வும் பெருமிதமும் கொள்கின்றேன் .இந்த இன்பமான தருணம் மென்மேலும்
இமையம் தொட்டு மலர என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா !
வாழ்க தமிழ் !வளர்க தம் பணி ! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
வாழ்த்துகள்! உடல் நிலைக் காரணமாகத் தங்களைக் காணமுடியால் போனது வருத்தமே!
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா.
RépondreSupprimerஅன்புள்ள அய்யா,
RépondreSupprimerதங்களின் தாயகப் பயணம் வெற்றியுடன் அமைந்தது கண்டு மகிழ்ச்சி. புதுகையில் புதுவைக்காரர் நூல் வெளியிட்டு... அதுவும் டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டது சிறப்புக்குரிய நிகழ்வு. பிரான்சு கம்பன் கழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது. பு துக்கோட்டையையே ஒரு கலக்கு கலக்குவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன்!
பாராட்டும்... வாழ்த்துகளும்...!
நன்றி.
தாயகப் பயணம் குறித்த பகிர்வில் தாங்கள் புத்தக வெளியிiட்டுப் படங்கள் அருமை ஐயா..
RépondreSupprimerவாழ்த்துகள்
RépondreSupprimerதாயகப் பயணம் நிறைவுடன் முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சிங்க ஐயா. தங்களைக் காண எத்தனை எத்தனை உள்ளங்கள் ஆர்வத்துடன் இருக்கின்றன என்பதை இந்த பயண நிகழ்வகளின் மூலம் உணர்ந்தோம். இது போன்ற இலக்கியப் பயணங்கள் எங்களைப் போன்றவர்களுக்காகவாவது அடிக்கடி தொடர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா.
RépondreSupprimerதேடிவந்தே ஆசானும் தேனமுதப் பாடமதை
நாடிவந்து தந்தீர்கள் நன்கு.
இலக்கியப் பயணமும் இனியும் தொடரட்டும்
RépondreSupprimer