mercredi 30 juillet 2014

பாண்டியன் ஜீவிதா



திருமிகு அ. பாண்டியன் ஜீவிதா இணையர் 
திருமண வாழ்த்துமலர்

மின்பூ வலையை அரசாளும்
     அன்புச் செல்வன் பாண்டியனும்
பொன்பூச் செல்வி ஜீவிதாவும்
     போற்றும் வாழ்வில் இணைந்தனரே!
இன்பூ பூத்து மணக்கட்டும்!
     இதயம் இனிப்பில் மிதக்கட்டும்!
என்பூஞ் சொற்கள் தூவுகிறேன்!
     எழில்பூந் தமிழாய் வாழியவே!

மலர்ந்து மணக்கும் சோலையென!
     மனத்தை மயக்கும் மாலையென!
அலர்ந்து மணக்கும் எண்ணங்கள்
     அமுதைச் சுரக்கும் வண்ணமென!
புலர்ந்து மணக்கும் நற்காலை
     புலமை மணக்கும் இன்பமென!
கலந்து மணக்க மணமக்கள்
     காலம் மணக்க வாழியவே!

13.07.2017

24 commentaires:

  1. பாண்டியன் ஜீவிதா பாராள வேண்டும்நல்
    ஆண்டின் தொடக்கமாய் அன்போடு - காண்டிப
    வில்லாய் கருணைக்கே ! வாழ்ந்து வளம்பெறுக
    நல்லோரின் வாழ்த்தில் நனைந்து !

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் பாண்டியன் ஜீவிதா தம்பதியர்க்கு
    என்றும் இனிதாக வாழ்ந்திருக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்
    வாழ்க வளமுடன்

    கவிஞர் ஐயாவின் வாழ்த்து மழை அருமை அதுவே
    ஆயுளுக்கும் நன்மை தரும்
    வாழ்க வளமுடன்
    3

    RépondreSupprimer
    Réponses

    1. வாழ்க மணமக்கள்! வாழ்க பலகாலம்!
      சூழ்க நலங்கள் சுடா்தமிழாய்! - ஏழ்பிறப்பும்
      ஒன்றி உறவாடி இன்பக் கவிபாடி
      வென்று களிக்கட்டு மே!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    இணையர் இவர்களின் இல்லறம் ஓங்கக்
    கணையாய்த் தொடுத்தீர் கவிதை! - துணையே
    தமிழாகத் தொண்டுகள் தானியற்றும் ஐயா!
    அமிழ்தாக ஏற்பர் அறிந்து!

    அழகிய வாழ்த்துமலர்க் கவிதை ஐயா!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

    பாண்டியன் ஜீவிதா இணையர்களும் இனிதே வாழ்ந்திட
    இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!

    RépondreSupprimer
    Réponses

    1. இணைந்த மணமக்கள் இன்பம் அனைத்தும்
      அணைந்த அழகினை ஆள்க ! - கணைவிடும்
      கண்ணழகில் காதல் கலைபயில்க! சூத்திரப்
      பண்ணழகில் காலம் பயின்று!

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா.

    அழுதமாய் பொழிந்த வார்த்தைகள் அழுத சுரபியானது போல
    அவர்கள் வாழ்வில் என்றென்றும் வசந்தங்கள் வீசட்டும்
    செப்பிய வார்த்தைகள் கண்டு மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
    த.ம 8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அமுதைப் பொழியும் அருந்தமிழ் காக்க!
      குமுதாய் மலரும் குலம்!

      Supprimer
  4. மணமக்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக் கவிதை அருமை ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எல்லா வளங்களும் ஏற்று மகிழ்ந்திட
      வல்ல இறையை வணங்கு!

      Supprimer
  5. பல்லாண்டு வாழ்க!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவர் பொழிந்த புகழ்தரும் சொற்கள்
      குலவும் மனத்துள் குதித்து!

      Supprimer
  6. வணக்கம் கவிஞரையா!

    அருமையான வாழ்த்துக் கவிதை!

    இணையர்! ஈடில்லா நலமனைத்தும் பெற்று
    நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொஞ்சும் தமிழ்நெறியைக் கோல மணமக்கள்
      நெஞ்சேந்தி வாழ்கவே நீடு!

      Supprimer
  7. இல்லற வாழ்வில் இணைந்த
    பாண்டியன் - ஜீவிதா இணையர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இல்லறம் ஏற்ற இணையா் இனிக்கின்ற
      நல்லறம் காண்கவே நன்கு!

      Supprimer
  8. திருமண வாழ்த்துக் கவிதை இனிமை ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திருமண வாழ்த்தில் திளைத்து மகிழும்
      இருமனம் நன்றே இணைந்து

      Supprimer
  9. இணைந்திட்ட தம்பதியர் என்றும்
    அணையா விளக்காய் இன்புற்று வாழ் !
    மணம் பரப்பும் மல்லிகை போல்
    குணம் கொண்ட பாண்டியனும்
    குலவிளக்கு ஜீவிதாவும் இணையற்ற
    வாழ்வதனை இல்லறத்தில் காண் ! என வாழ்த்துகிறேன் நெஞ்சார....!

    கவிஞரே இனிய வாழ்த்தை ஈந்தீரே வாழ்க என்றும் நீடூழி ...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மல்லிகைத் தோட்டமாய் வாழ்வு மணக்கட்டும்!
      சொல்லி மகிழ்..தேன் சுரந்து!

      Supprimer
  10. கவிதையால் அருமையான வாழ்த்து!

    இருவரும் ஈடில்லா இன்பம் பெற்று
    இனிதே வாழ எங்கள் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்பம் பெருகட்டும்! ஈடில் குறள்வழியில்
      அன்பு பெருகட்டும் ஆழ்ந்து!

      Supprimer

  11. வணக்கம்!

    இல்லறம் ஏற்கும் இனிய மணமக்கள்
    நல்லறம் சூடி நலம்பெறுக! - சொல்லறம்
    காத்துச் சுடா்க! கனிந்த குறள்போல
    பூத்துக் கமழ்க பொலிந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நண்பா் அ. பாண்டியன் நங்கை நா. சீவிதா
      பண்ணும்நற் பாடலுமாய்ச் சேர்ந்தனரே! - கண்டுவந்து
      வாழ்த்து மலர்சொரிந்தோம்! வண்ண மணமக்கள்
      ஆழ்ந்து பொழிகவே அன்பு!

      Supprimer
  12. வணக்கம் ஐயா
    தங்கள் அன்பு வாழ்த்துக் கண்டு மனம் நெகிழ்கிறேன் ஐயா. கடல் கடந்தும் மனதால் நம்மை இணைத்த இணையத்திற்கு நன்றிகள். தங்கள் அன்புக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. கருத்துரையில் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள். நட்புகள் தொடரட்டும். வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கண்ணன் கழலிணை நற்கவி வேண்டுகிறேன்
      எண்ணம்போல் வாழ்க இனித்து!

      Supprimer