dimanche 27 juillet 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 30
நண்பர்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

வாட்டி வதைக்கின்ற நாட்டு நிலைமையினை
ஓட்டி அழித்தல் உயர்வு!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்
அள்ளும் உணர்வை அணைத்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நற்கணித மேதைக்குக் கட்டிய இப்படைப்புப்
பொற்கோயில் கொண்ட பொலிவென்பேன்! - சொற்சோ்
கரந்தைச் செயகுமார் கன்னல் தமிழ்கற்ற
பரந்த அறிவின் பயன்!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கம்பன் வடித்த கவிதைகளைக்
       
கற்றால் தமிழின் சுவையறிவார்!
நம்பன் இராமன் மொழியழகும்
       
நங்கை சீதை விழியழகும்
நம்முள் தங்கிக் கமழ்ந்திட்டால்
       
நற்றேன் பாயும் வாழ்வினிலே!
எம்மண் கொண்ட மாண்புகளை
       
இயம்பும் சீதை பெருங்கதையே!

----------------------------------------------------------------------------------------------

மிண்டும் வணக்கம்

ரசம் என்பது தமிழ்ச்சொல் அன்று எனவே

கம்பன் சுவையென்றால் கம்பன் வளமென்றால்
நம்மொழி ஓங்குமே நன்கு!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தமிழ் அல்லாத சொற்களை நீக்குதலும்
புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குதலும்
தமிழ் காப்போர் கடமை!

பழமை எனயெண்ணி அப்படியே ஆளுதல் சிறப்பன்று!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் என்ற நிலையை
உருவாக்கவேண்டம்!

எந்த நிலையிலும் பிரஞ்சுக் காரர்கள் ஆங்கிலம் கலந்து எழுதவோ பேசவோ மாட்டார்கள்!

எல்லா மொழியும் கலந்து வளர்ந்துள்ள ஆங்கில மொழியிலும் தனித்த ஆங்கில இலக்கியப் போக்கு உண்டு!

தனித்தமிழ் போற்றும் தமிழர்தம் நூலைப்
அணிந்து மகிழும் அகம்!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

சாதி சமய சழக்குகளைச்
   சாற்றும் உலகைத் தூளாக்கு!
மோதி மிதித்துப் பகைவர்களை
   முன்னைத் தமிழின் துயர்போக்கு!
போதி மரத்து நற்புத்தன்
   புகன்ற அன்பை வழியாக்கு!
நீதி ஏந்திக் கமழ்தென்றல்
   நிலத்தில் வீச மகிழ்கின்றேன்! 

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

போட்டியில் வென்று பொலிகின்றீர்! வாழ்த்துகளைப்
பாட்டில் படைக்கின்ற பாரதிநான்! - நாட்டமுடன்
சொன்னேன் புகழ்வெண்பா! சூடிச் சரவாணி
இன்றேன் தமிழை இயம்பு!

----------------------------------------------------------------------------------------------

புலவர் அவர்களுக்கு வணக்கம்

சந்தம் ஒலித்திடச் சாற்றிய பாட்டினில்
சிந்தை மயங்கும் செழித்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பிறப்பின் நிலையைச் சிறப்புடன் சென்னீர்
பறந்து மகிழ்ந்தேன் படித்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தன்னைப் போற்றும் தமிழ்மைந்தன்
   தமிழைப் போற்ற மறந்ததுமேன்?
பொன்னைப் பொருளைத் தேடுகிறான்!
   புகழைக் குழியில் மூடுகிறான்!
தென்னை மரத்து வேரினிலே
   தீயை மூட்டி எரிப்பதுவோ?
அன்னைத் தமிழின் பற்றேந்தி
   அளித்த பதிவை வணங்குகிறேன்!

23.02.2013

21 commentaires:

 1. நண்பர்கள் தளத்தில் தாங்கள் இட்ட கவிப்பூ ஆனாலும் சலிப்பு தரவில்லை .பாராட்டுகள்!
  த ம 2

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   காலையில் வந்தீா்! கருத்துடன் பாராட்டு
   மாலையும் தந்தீா் மகிழ்ந்து!

   Supprimer
 2. கருத்துரையை
  கவியுரையாய்
  நல்கும்
  தங்களுக்கு நன்றி ஐயா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கருத்துரை தந்தீா் கவியுரையைக் கண்டு!
   விருந்துரை இன்பம் விளைத்து!

   Supprimer
 3. அருமையான கவிநடையில் கருத்திட்டு
  அழகு தமிழைப் பருக வைக்கும் கவிஞரே
  உம் தமிழால் எம்மை எல்லாம் குளிர்வித்து
  எம்மைத்த் தமிழ் கற்க வைத்தீரே!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தில்லை அகத்தில் திரண்ட கருத்துக்கள்
   எல்லை இலாத இனிப்பு!

   Supprimer
 4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வலையுலகச் சித்தா் வருகையைக் கண்டென்
   கலையுளம் தீட்டும் கவி!

   Supprimer
 5. வணக்கம் ஐயா!

  பாட்டில் இசைத்துப் பகர்ந்தீரே நல்லுரைகள்!
  நாட்டில் நறுந்தமிழ் நன்குயர! - ஏட்டின்
  எழுத்திதைக் காப்போமே! இன்மொழி வாழ
  விழுதென ஆவோம் விரைந்து!

  அருமையான கவிப்பூக்கள் ஐயா!

  நன்றியுடன் இனிய வாழ்த்துக்களும் உங்களுக்கு!

  RépondreSupprimer
  Réponses


  1. வணக்கம்!

   கன்னல் கவிஞா் இளமதியே! எந்நாளும்
   மின்னல் கவிதைகளை மீட்டு!

   Supprimer
 6. வலைப் பூ -என் கவிப் பூ
  வலையில் விழுந்த பூக்களை எடுத்தது யாரோ? தொடுத்தது யாரோ? விடுத்த பூக்களை தடுத்தது யாரோ? யார் அறிவார் பராபரமே!
  தொடுத்தப் பூக்கள் யாவையுமே கலைமகள் காலடியில் சமர்ப்பித்தால் கவிதைக் கலையும் சிலை வைக்கும் கவியே புவியில் புகழ்ந்துன்னை! காகம் வராமல் பார்த்துக்கொள்!
  மோகம் என்பது முப்பது நாள்.
  புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   என்ன உரைத்தீா் எதுவும் புாியலையே!
   இன்னும் தெளிவாய் எழுது!

   வலையில் மலா்ந்த பூக்களையே
   மணமாய் எடுத்து மணங்கொண்டேன்!
   கலையில் சிறந்த கவிஞன்நான்
   கருத்தைக் கவியாய்த் தொடுத்திட்டேன்!
   விலையில் போகும் கீழ்நெஞ்சன்
   வீணே தடுக்கச் செயற்செய்வான்!
   மலையில் காகம் அமர்ந்தாலும்
   மலையின் வன்மை குன்றிடுமோ?

   Supprimer
 7. கவிப்பூக்கம் வாசம் மிகுந்தவை! வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கவிப்பூக்கள் வீசும் கருத்தினைக் கண்டால்
   புவிப்பூக்கள் வாடும் புரண்டு!

   Supprimer
 8. தமிழ் நலம் பேணும் கருத்துகள்
  வலைப்பூ உலாவில் ஆங்கே பதிந்து
  விழிப்பூட்டும் அறிஞரே - தங்கள்
  கருத்துகளால் ஆனதொரு பதிவை
  கீழ்வரும் இணைப்பில் பார்க்கலாம்!
  http://wp.me/pTOfc-aX

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அன்னைத் தமிழுக்கு அரும்பணி யாற்றிவரும்
   உன்னை வணங்கும் உலகு!

   Supprimer

 9. வணக்கம்!

  வண்ண வலைகளில் வார்த்த கருத்துக்கள்
  எண்ண வலையில் இணைந்திடவே! - உண்ணுகிறேன்
  ஒவ்வொரு பூக்களும் ஒவ்வோா் சுவையுடைத்து!
  செவ்விய சீரைச் செறிந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   செவ்விய செந்தமிழ்த் தேனைத் தினமருந்த
   அவ்விய நெஞ்தத் திருளகலும்! - இவ்வுலகில்
   எங்கும் தமிழ்பரவ ஏற்ற வழிசெய்வோம்
   பொங்கும் தமிழின் புகழ்!

   Supprimer
 10. எல்லோர் வலையும் எழில்பூக்கும் எம்கவிஞர்
  செல்லும் இடம்போல் செழித்து !

  அழகிய கவிகள் வாழ்த்துக்கள் ஐயா
  வாழ்க வளமுடன்
  11

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அன்பின் மிகுதியால் அள்ளிப் படைத்தகவி
   என்றும் ஒளிரும் எழில்

   Supprimer