jeudi 3 juillet 2014

நண்பா்களின் வாழ்த்துக்கள்
இனிய காலை வணக்கம்!
நலமா?

பெறற்கரிய என் முகநூல் நண்பரும்
பிரான்சு நாட்டின் கம்பன் கழகத் தலைவரும்
நற்றமிழ்த் தொண்டால் தேசம் கடந்தும்
தமிழ்நேசம் மிகு கவிஞர் கி. பாரதிதாசன்
அவர்களுக்கு (1.7.2014) அன்று பிறந்த நாள்.
மனமார்ந்த நல்வாழ்த்துகள் கவிப்பெருந்தகையே!

எழுத்தாணி பற்றி அகரம்
எழுதத் தொடங்கிய நாள்முதல் உன்னால்
ஏற்றம் கொண்டாள் தமிழன்னை!
 
வளர்பிறையாய் நீ
தமிழிலக்கிய இலக்கணம்
பயின்றபோது
கவிப்பெண்ணாய்
வடிவெடுத்தாள்!

கன்னல்மொழியால்
செவ்விதழ் மலர்ந்து
சங்க நாதமாய்த் தமிழை நீ முழங்கியபோது
தீம்திரிகிட தோம்தரிகிடவெனவே
தமிழே நீ ஆடிக்களித்தாய்!

யாப்பினை யாத்தபோதும்
தமிழே நீயே அணியிலக்கணமானாய்!
புதுவைக் குயிலாய்த் தமிழாய்ந்த புலவரோடு
பூபாளம் இசைக்க வைத்து
புத்துயிர் ஊட்டினாய்!

திரைகடலோடித் திரவியம்
தேடப் பிரான்சு வந்தபோதும்
இன்னிசைத் தேவாரமாய்
நால்வகைக் கவிப்பாக்களாய்ச்
சீர்மிகு எழுச்சியுரைகளாய்
கவியரங்க,
தொல்காப்பியக் களங்காண
ஆன்மிகத் தமிழ்ப்பேசிக் கடற்கரையில்
வண்ணமீன்களைப் படைக்கவும்
கவி சமைக்கவும்
மகளிர் சபையேறி வழக்குரைக்கவும்
ஆக்குவதும் ஆற்றுப்படுத்தலுமாய்
தமிழ்க் குணக்குன்றே
உன் அளப்பரிய தமிழ்ப்பணியால்
தமிழன்னை தன் தாமரைக்கண்ணோரம்
ஆனந்தக் கண்ணீராய்ப் பெருக்கெடுக்கிறாள்!

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயும்
சான்றோனாக்கிய தந்தையும்
ஆழங்கால்பட்ட தமிழமுதூட்டிய ஆசானும்
நின் கரம் பற்றியே தமிழுக்காய்
உனை மனமுவந்து ஈந்த இல்லத்தரசியும்
இவன் தந்தை எந்நோற்றான்கொல்
எனும் மக்கட்செல்வமும்
உனைப்போன்ற தமிழாய்ந்த
புலவரை நட்பாய் நல்வரமாய்ப்பெற  
நாங்களும் என்ன தவம் செய்தோமோ?

தமிழ் உள்ளளவும்
கம்பன் கவி வாழுமளவும்
வளி தவழுமளவும்
புவியன்னை இயங்குமளவும்
முத்தமிழே
நீவிர் பல்லாண்டு பல்லாண்டு
நீடுநலமும் நல்வளமும்
இணையில்புகழும் பெற்று
இணையராய் இல்லத்தாரோடு
நல்நட்போடு நற்றமிழோடு
என்றும் மார்க்கண்டேயனாய்
வாழிய வாழியவே!

மதுரை அருள்மிகு
அன்னை மீனாட்சியும் சொக்கரும்
நல்லாசி வழங்கிடவே
நான்மாடக் கூடலிலே
நானும் இறைஞ்சி
நும் நலன்வேண்டி
அம்மையப்பனின்
தாள்பணிகிறேன்!
கவிப்பெருந்தகையே!
வாழ்க நற்றமிழுடனே
நாளும் நாளுமே!
வாழ்க வாழ்கவே!

அகமகிழ்வுடன்
மதுரை . ரேணுகாதேவி
01.07.2014

வணக்கம்!

என்றன் பிறந்தநாள் இன்பப் பெருக்கென
உன்றன் கவிதை உரைக்கிறது! - பொன்நன்றி!
வண்டமிழ் மாமதுரை வாழும் இரேணுகா
தண்டமிழ்த் தாயின் தவம்!

முகநுால் மணக்க மொழிதீட்டும் தோழி!
பகைநுால் அறியாத பாவை இரேணுகா!
கூடல் மதுரைக் குடியிருக்கும் மீனாட்சி
பாடல்போல் தந்தார் படைப்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
03.06.2014
----------------------------------------------------------------------------------------------

 
கம்பன் கழகம் கடல்கடந்த நாடதனில்
செம்மொழித் தேரோட்டும் சீராளர் -நம்பியவர்
கண்டனர் இந்நாள் களிபிறப்புத் தேன்திருநாள்!
விண்டனன் வாழ்த்து விரைந்து.

கவிமாமணி வெற்றிப்பேரொளி
01.07.2014


வணக்கம்!

கவிமா மணிவெற்றிப் பேரொளியார்! கன்னல்
சுவைமா மணியார் கவியில்! - புவிமா
மணியாய்ப் புகழ்பெற வாழ்த்துரைத்தார்! சூடி
அணியாய் மின்னும் அகம்!

கவிஞா் கி. பாரதிதாசன்
03.06.2014
----------------------------------------------------------------------------------------------

மண்ணுலகின்
மா மனிதர்..!

மங்காப்புகழ்
தமிழ்த்தொண்டர்..!
வெண்'பா' படைக்கும்
வெண்ணிலவுள்ளம்
படைத்தவர்...!

இலக்கணம் மீறாத
''
முத்தமிழ்'' வித்தகர்..!

கடலெனக் கவிதை
படைக்கும் ஐந்தமிழின்  
அருமைப் புதல்வர்...!!

தமிழினம் செழிக்க
நற்றமிழ் செய்யும்
நல்மனம் படைத்தவர்.
செந்தமிழ்ச் செல்வர்.!

என் இனிய தோழமை
கவிஞர் திரு. பாரதிதாசன்
அவர்களின் இனிய
பிறந்த தின நல்வாழ்த்துக்கள்...!!

வாழ்க வளமுடன்..!
வாழ்க பல்லாண்டு..!

குறைவில்லாச் செல்வமும்
சகல சௌபாக்கியமும. பெற்று
வாழ வாழ்த்துக்கள்!!

சரண் அழகு
01.07.2014

வணக்கம்

வண்ண முகநுால் வழங்கிய நண்பாிவா்!
எண்ண மினிக்க எழுதுபவா்! - மண்ணின்
அரணழகு போன்றே அரும்நட்பு காக்கும்
சரணழகு வாழ்க தழைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
03.07.2014

22 commentaires:

 1. வாழ்த்துக்கள்
  அருமை
  இனிமை

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அன்புடன் வந்தே அளித்தீா் அரும்வாழ்த்து!
   பண்புடன் கொண்டேன் பணிந்து!

   Supprimer
 2. சிறப்பாக வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நட்பின் மிகுதியால் நண்பா் அளித்திட்டாா்
   பட்டொளிரும் வண்ணத்தில் பாட்டு!

   Supprimer
 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா..

  RépondreSupprimer
 4. பல்லாண்டு பல்லாண்டு
  பல்லாயிரத்தாண்டு
  வளத்தோடும் நலத்தோடும்
  தமிழ்மனத்தோடும் சிறப்புற்று வாழ
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பல்லாண்டு பாடிப் படைத்த எழுத்துக்கள்
   சொல்லாண்டு மின்னும் சுடா்ந்து!

   Supprimer
 5. வணக்கம் ஐயா!

  பேறுகள் மேலுமுண்டோ
  கூறுவீர் எங்களுக்கும்!
  பாரினில் போற்றுகின்ற
  வேர்நிகர் நட்புபோன்றே!

  பெருமையும் தரும் நண்பர்கள் வாழ்த்து!
  அருமை! அருமை!

  வாழ்த்துக்கள் ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இனிய இளமதி ஈந்திட்ட வாழ்த்துக்
   கனிபோல் கமழும் கவி!

   Supprimer
 6. வணக்கம்
  ஐயா.

  பிறந்த நாளில் கவிக்கானம் இசைத்த உள்ளங்களின் நினைவுப்பகிர்வுகள் மிக சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வண்ண மலராக வார்த்த கருத்துக்கள்
   எண்ணம் பறிக்கும் இழுத்து!

   Supprimer
 7. காலம் தாழ்த்திய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவி வேந்துக்கு!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வேந்தா் எனும்சொல்லால் வெல்லும் வியன்புகழ்
   ஏந்தி உரைத்தீா் எனை!

   Supprimer
 8. வணக்கம் கவிஞரையா!...

  நண்பர்களின் வாழ்த்தும் மிக அருமை!

  பாருங்கள் உங்கள் புகழ் எங்கேவரை பரந்துள்ளது என்று!..
  மட்டில்லா மகிழ்ச்சி ஐயா!

  வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எட்டிப் பறந்தாலும் என்னுயிா் இன்றமிழில்
   கொட்டிக் கிடக்கும் குளிர்ந்து!

   Supprimer
 9. வாழ்த்துக்கள் ஐயா! பகிர்வுக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பிறந்தநாள் பேணிப் பெருகும்இன் பீந்தீர்!
   சிறந்தநாள் கண்டேன் செழித்து!

   Supprimer
 10. வாழ்த்துகள் அய்யா.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கீதா அளித்த அரும்வாழ்த்து! கீா்த்திமிகு
   மாதா அளித்த மகிழ்வு!

   Supprimer

 11. முகநுால் கவிஞா் மொழிந்த கவிதை
  அகமேல் அமர்ந்துஅரசு ஆளும்! - சுகமேல்
  சுகமெனச் சூடும் சுவைத்தமிழாய் வாழ்க!
  தொகையென இன்பம் தொடா்ந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தொகையாய் இனிமை தொடர்ந்து சுரக்க!
   தகையாய்ப் புலமை தழைக்க! - வகைவகையாய்
   பூக்கள் மணக்க! புகழ்மணக்க! என்வாழ்வு
   பாக்கள் மணக்கும் படைப்பு!

   Supprimer