mardi 1 juillet 2014

நான் ஏன் பிறந்தேன்?

நண்பா்களின் வாழ்த்து மழை



பொன்விழாபு் புலவர்

இன்றமிழ்த் தலைவர்

கவிஞர் கி. பாரதிதாசன் வாழ்கவே!

இன்று பிறந்த நாள் காணும் உங்களுக்கு
என் உளங் கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்!

இன்று போல் என்றும் வாழ்வில் எல்லா நலன்களும்
கிடைக்கப் பெற்று இனிது வாழ இறை அருளை வேண்டுகிறேன்!

இன்பலாப் போன்றே இனியகவி தீட்டுகின்ற
என்குருவே! நற்பணி ஏந்தலே! - இன்றுயர்ந்து
பொன்விழாக் காணும் புகழ்க்கவியே! வாழ்கவே
எண்ணிலாப் பேறுகள் ஏற்று!

பாவலரே உம்புகழ் பாரெல்லாம் ஓங்கட்டும்!
நாவலரே வாழ்த்துகிறேன் நானுன்னை! – காவலரே!
செந்தமிழ் யாப்பில் சிறந்தவரே! உம்பணியால்
பைந்தமிழ் பூக்கும் பரந்து!

கம்பன் கழகக் கவியரசே! காலமெலாம்
நம்பன் அரன்நாமம் நண்ணுவீர்! - அம்புவியில்
ஆற்றும் அரும்பணி அன்னைத் தமிழிற்கே!
போற்றும் புவியே புகழ்ந்து!

பெற்றோரும் பேணிப் பெருமைகொள! எந்நாளும்
உற்றோரும் ஊரும் உவகையுற! - கற்றோர்
கவினுலகும் காலமும் காத்திடு(ம்)உம் தொண்டு!
புவியாள வேண்டும் பொலிந்து!

 

அன்பு மாணவி
இளமதி - சர்மனி




47 commentaires:

  1. என் இனிய வாழ்த்துக்களும்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய வாழ்த்துக்கே ஈந்துவந்தேன் நன்றி
      பனிபோல் இதமாய்ப் படைத்து!

      Supprimer
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேன்போல் இனித்தது செந்தமிழ்! நன்றியை
      வான்போல் பொழியும் மனம்!

      Supprimer
  3. தங்கை இளமதியின் வாழ்த்துப் பார்த்துத்தான் தங்கள் பிறந்தநாள் தெரிந்தது அய்யா.
    தங்களுக்கு எனது இனிய பிறந்தநன்னாள் வாழ்த்துகள்.
    இன்னும் பல பத்தாண்டுகள் இனிதே வாழ்ந்து,
    நல்லதமிழ்த் தொண்டாற்றி, நல்லோர்கள் போற்றிட
    நிறை வாழ்வு வாழ்கவென நெஞ்சார வாழ்த்துகிறேன். வாழ்க வாழ்க!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்து நிலவா் மொழிந்த எழுத்திற்குக்
      கொத்து மலா்கள் கொடு!

      Supprimer
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்முகில் தந்திட்ட வாழ்த்தினை நாளும்
      அமுதென அள்ளி அருந்து!

      Supprimer
  5. வணக்கம் ஐயா!

    பணிவான, அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் உங்களுக்கு ஐயா!

    தங்களின் பிறந்த தினத்திற்காய் எழுதி அனுப்பிய வாழ்த்திதனை
    இங்கு பதிவேற்றியமை கண்டு ஆச்சரியமடைந்தேன்...

    மனமார்ந்த நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஏன்பிறந்தேன் என்றுநான் எண்ணி இருக்கையிலே
      தேன்கலந்து தந்தீா் செழுந்தமிழை! - ஊன்கலந்து
      என்றன் உயிா்கலந்து உன்றன் கவியிருக்கும்!
      என்றும் மறவேன் இனி!

      Supprimer
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அள்ளி அளித்திட்ட வாக்கெண்ணி! என்மனம்
      துள்ளித் குதிக்கும் தொடா்ந்து!

      Supprimer
  7. கணீர் என்ற குரலுக்கு சொந்தகாரரே... உமது குரல் தொடர்ந்து ஒலிக்கவாவது நீர் இன்னும் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ நான் இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்..

    கம்பன் விழா விடியோவை சிறிது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பார்த்தது மிக மிக சந்தோஷம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமை அகத்தேன் அளித்திட்ட வாழ்த்துப்
      பெருமை கொடுக்கும் பெருத்து!

      Supprimer
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      யாழிசை பாவலா் ஈந்தநல் வாழ்த்தெல்லாம்
      ஆழியான் செய்த அருள்

      Supprimer
  9. கவி மழை பொழியும் புலவர் ஐயா நீவிர் பல்லாண்டு வாழ்வீர். இனிய தமிழ்க் கவிகள் தருவீர்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நண்பா் முரளிக்குச் சொன்னேன் நனிநன்றி!
      தண்டமிழ் காத்திடத் தான்!

      Supprimer
  10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
    தம6

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம!

      கரந்தைச் செயகுமாா் கன்னல் கனியாய்
      வரைந்தார் பிறந்தநாள் வாழ்த்து!

      Supprimer
  11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய வாழ்த்தை இயம்புகுரல் கேட்டுப்
      பனிபோல் உருகுமெனைப் பார்!

      Supprimer
  12. குமிழ்போலப் போகும் குறுகிய வாழ்வில்
    தமிழ்போல வாழ்க தகைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்போல் வாழ்க தழைத்தெனும் சீா்கள்
      அமுதாய் இனிக்கும் அகத்து!

      Supprimer
  13. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தினமும் வருகைதரும் திண்டுக்கல் நண்பா்
      மனம்போல் வளா்க மகிழ்ந்து!

      Supprimer
  14. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....!

    இன்று போல் என்றும் வாழ்க
    பொருளோடும் புகழோடும்
    பொங்குகின்ற தமிழ் உணர்வோடும்
    புதிதாய் பூத்த புதுமலர் போல் பொலிந்து

    தமிழ் தழைக்க
    தலையெடுத்த பாரதிதாசன்
    பொருந்திய பெயரால்
    புனைந்த கவிதையும் நீரும்
    புவியுள்ளவரை நிலைக்கும் உம் புகழ்! வாழ்க ! வாழ்க !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புதுமலர் போன்று பொலிந்திடும் வாழ்த்து!
      மதுமலா் போன்று மணந்து!

      Supprimer
  15. வணக்கம் கவிஞரையா!

    வாழ்க வாழ்க நீடூழி வாழ்க!
    சூழ்க சூழ்க நலமெல்லாம் சூழ்க!..

    உளமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பூங்கொடி வந்தார்! புகழ்க்கொடி தானேந்தி!
      மாங்குயில் கூவும் மகிழ்ந்து!

      Supprimer
  16. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா.
    நல்லாரோக்கியம் ,நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் வேண்டுகிறேன்.
    -நன்றி-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பிாியா அளித்த அாியதமிழ் வாழ்த்துப்
      பொிய இனிமைப் பெருக்கு!

      Supprimer
  17. செந்தமிழ்ச் சோலைதனில் சிட்டாகப் பறந்து புகழ் வென்று
    செழிப்புற வாழ்த்துகின்றேன் வியந்து !

    வாழ்த்துக்கள் ஐயா வையகம் உள்ளவரை வளர்க தமிழ் அமிர்தம் உண்டு !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பட்டாய்க் கவிதைகளைப் பாடிக் குவித்துநான்
      சிட்டாய்ப் பறப்பேன் சிாித்து!

      Supprimer
  18. தோழி
    இளமதியின் இனிய நல் வாழ்த்துக் கண்டு கனி எனவே
    புசித்து மகிழ்ந்தது மனமும் இன்று !
    என் தோழிக்கும் மனமார்ந்த பாராட்டுக்களையும்
    வாழ்த்துக்களையும் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன் .
    வாழ்த்துக்கள் தோழியே !

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புத் தோழி அம்பாளடியாள்!..

      இருவிழி நீர்கசிய என்நன்றி ஈந்தேன்!
      குருவருள் தானென்று கொள்!

      பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி தோழி!

      எனக்குக் கிடைக்கும் அத்தனை பாராட்டும், வாழ்த்துக்களும்
      என் குருவாகிய கவிஞர் ஐயாவுக்கே அர்ப்பணம்!

      மிக்க நன்றி தோழி!

      Supprimer

    2. வணக்கம்!

      இளமதி பாடிய இன்றமிழ்க் கண்டை
      உளமதில் கொண்டீா் உவந்து!

      Supprimer

    3. வணக்கம்!

      குருவருள் என்று குவித்திட்ட சொற்கள்
      திருவருள் என்பேன் திகைத்து!

      Supprimer
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  20. பேருவகை நெஞ்சில் பெருக்கெடுக்க எம்கவிஞர்
    சீர்பெறணும் என்றும் செழித்து!

    பூவும் பனிக்காற்றும் புல்லாங் குழல்கீற்றும்
    தூவும்வாழ்த் தென்றும் தொடர்ந்து !

    அனிச்சம் மலரும் தினம்பூத் திருக்கும்
    கனிச்சுவை பாவலரைக் கண்டு !

    வெண்மதி போன்று வெளிச்சம் தருங்கவிஞர்
    எண்ணத்தில் வண்ணம் எடுத்து!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்றும்
    கனிச்சுவை காண்க கமழ்ந்து!

    கற்றிட வேண்டும் கனிவிருத்தம் உம்மிடத்தில்
    பெற்றிட வேண்டும்நான் பேறு!


    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா வாழ்க என்றென்றும் வளமோடு

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குறளிசை பாடிக் கொடுத்திட்ட வாழ்த்தும்
      அறமிசை பாடும் அழகு!

      Supprimer
    2. இனிய தம்பி சீராளன் அவர்களுக்கு வணக்கம்!
      நலம்! நலமுடன் வாழ்க!

      இன்பக் குறள்பாடி என்னை மகிழ்வித்தீர்!
      துன்பம் அனைத்தும் துகளாகும்! - என்றன்பால்
      கொண்டுள அன்புக்குக் கொட்டி எதைக்கொடுப்பேன்?
      தொண்டுளம் ஓங்கும் சுடர்ந்து!

      Supprimer
  21. ஜெர்மனியின் செந்தமிழ் மலரே !வாழ்க நீவீர் பல்லாண்டு !

    RépondreSupprimer
    Réponses

    1. வனக்கம்!

      இளமதி என்னும் இனியதமிழ் வாணி
      உளமோ உயா்கவி ஊற்று!

      Supprimer

  22. அன்னைத் தமிழ்காக்க உன்னை அளித்தனரே!
    பொன்னை நிகா்த்த புகழ்ப்புலவா! - முன்னைநெறி
    பூத்து மணப்பாய்! பொலிமலா்ப் பாக்காட்டைக்
    காத்துக் களிப்பாய் கமழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கன்னல் தமிழ்காக்கும் மின்னல் மறவனென
      என்னைப் படைத்தார்! இனப்பற்றில் - முன்னே
      இருக்க உணர்வீந்தார்! எல்லாம் இறைவன்
      திருவருள் என்பேன் தெளிந்து!

      Supprimer