jeudi 15 août 2013

இளமதியின் கேள்வி


இளமதியின் கேள்வி


ஐயா வணக்கம்!

நல்ல இன்னுமொரு பா வகைத் தொடர் ஆரம்பம்.
அருமையாக இருக்கின்றது!

சீர்கள் ஒவ்வொன்றும் மிகமிக அழகாக அடுக்கிவைக்கப்பட்டு
ஒரு மாலையாகத் தோன்றுகிறது. அற்புதம்!

ஐயா.. இவ்வகைப் பாக்களைக் கலிவிருத்தம் அல்லது கனிவிருத்தம் என்கின்றீர்கள் .

இங்கே எனக்கொரு ஐயம்...

உங்கள் பாக்களில் இங்கே வரும் சீர்கள் அத்தனையும்
காய்ச்சீர்களாக இருக்க எப்படி இவற்றைக் கனிவிருத்தம் என்கின்றீர்கள்?...
ஒரு சீர் என்றாலும் கனியாக இல்லையே ஐயா...
விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

மிக்க நன்றி!

----------------------------------------------------------------------------------------------------------------------------------




வணக்கம்!

கனிவிருத்தம் என்ற தலைப்பில் நேற்று நான் எழுதிய கவிதை
ஒரடியில் நான்கு காய்ச்சீா்கள் பயின்றுவரும் கலிவிருத்தம் ஆகும்



கலிவிருத்தப் பொது இலக்கணம்

அளவடி நான்கின கலிவிருத்தம் என்று யாப்பருங்கலம் கூறுகின்றது.
ஓரடியில் நான்கு சீா்கள் அமைய வேண்டும்.
அதுபோல் நான்கு அடிகள் வரவேண்டும்.
நான்கடிகளும் ஓரெதுகை பெற வேண்டும்.
முதற்சீா் மூன்றாஞ்சீா் மோனை பெறவேண்டும்

காய்ச்சீா் மட்டுமே பயின்றுவரும் இப்பாட்டைக் கனிவிருத்தம் என்று
பெயரிட்டது பொருந்துமா?

முற்றல் கனிபோன்று சுவை தருகின்ற பெண்ணழகை
இக்கவிதை பாடுவதால் கனிவிருத்தம் என்று பெயரிட்டேன்.

இயற்கையில் காய் முற்றிக் கனியாகும்.
காய்ச்சீா்கள் என் காரிகையின் பேரழகைக் கண்டு கனிந்தன!
ஆதலால் காய்விருத்தம் இங்கே
கனிவிருத்தம் என்று பெயா் பெற்றது.

கனிவிருத்தம் என்றபெயா் கன்னல் கவிதைக்[கு]
இனிபொருத்தம் என்றே இயம்பு!

------------------------------------------------------------------------------------------------------------

6 commentaires:

  1. கனிவிருத்தம் என்றபெயா் கன்னல் கவிதைக்[கு]
    இனிபொருத்தம் என்றே இயம்பு!

    கனிவாய் அளித்த விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா..!

    RépondreSupprimer
  2. வகுப்பு தொடங்கி விட்டதா முதல் பகிர்வை படித்து விட்டு வருகிறேன்.

    RépondreSupprimer
  3. காய்ச் சீராக இருப்பினும்
    கனிச்சுவை நிறைந்த கவியாக இருப்பதால்தான்
    கலிவிருத்தம் அதை கனிவிருத்தம் என
    தாங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என நானும் உணர்ந்தேன்
    தங்கள் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. ஐயா வணக்கம்!

    என் கேள்வியையே பதிவொன்றின் தலைப்பாகப் பதிந்துள்ளீர்கள்.
    முதலில் அதற்கு என் நன்றி!

    தங்களின் விடை கண்டேன். இப்போது புரிகிறது.
    காய்ச்சீர் கொண்ட பாக்கள் எப்படிக் கனிவிருத்தம் எனப்பட்டதென.
    உங்கள் கவித்துவ மேன்மை கண்டு உள்ளம் பூரித்தேன்!

    கலிவிருத்த இலக்கணம் தந்து எங்களையும் வழுவின்றி எழுத ஊக்குவிக்கும்
    உங்கள் தன் நலமற்ற பெருந்தன்மைக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!

    ஐயா!. ..

    விருத்தம் வரைய மொழிந்த பதிலே
    வருத்தம் மறைந்த மகிழ்வு!

    மிக்க நன்றி!

    RépondreSupprimer
  5. கேள்வியும் பதிலும் நன்று.எல்லோருக்குமே அவசியமானவை தொடர்ந்து வருகிறேன் தெரிந்துகொள்ள

    RépondreSupprimer
  6. தங்கள் விளக்கம் அருமை நன்றி ஐயா.

    RépondreSupprimer