lundi 7 janvier 2013

ஆக்கமும் அழிவும்!




ஆக்கமும் அழிவும்!

அழிவிலா தாகும் ஆய்ந்துறும் கல்வி!
    அமிழ்தென இனித்திடும் அன்பு!
பழியிலா தாகும் பண்புடை உள்ளம்!
    பற்றுடன் ஆற்றிடும் தொண்டு!
ஒழிவிலா தாகும் ஒற்றுமை வாழ்வு!
    உலகினில் உயிர்களின் நேயம்!
அழகிலா தாகும் ஆணவம் எண்ணம்!
    ஆக்கமும் அழிவையும் உணா்க!

11 commentaires:

  1. நல்ல செய்தியை தரும் கவிதை .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அரிய கருத்தை அவனி உணா்ந்தால்
      உரிய உயா்வை உறும்!

      Supprimer
  2. உண்மைதாங்க அய்யா...!!

    பகிர்வுக்கு நன்றி அய்யா!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சீனி வருகவே! செந்தமிழ்ப் பூ..நாடித்
      தேனீ வருகவே தோ்ந்து!

      Supprimer
  3. ஆக்கமும் அழிவும்!
    அரிய பொருளும்
    ஊக்கமே தந்திடும்
    உயர்ந்த கவிதை
    நோக்கினன் நானே
    நுவன்றனன் பாவே
    வாக்கினை இங்கே
    வழங்கியென் பங்கே

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஒவ்வொரு நாளும் உயா்ந்த கருத்தெழுதும்!
      செவ்விய நெஞ்சம் செழித்து!

      Supprimer
  4. அழிவிலா தாகும் ஆய்ந்துறும் கல்வி!
    அமிழ்தென இனித்திடும் அன்பு!

    அருமையான வரிகள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழிவிலாக் கல்வியை அள்ளிப் பருகிப்
      பழுதிலா வாழ்வினைப் பற்று!

      Supprimer
  5. ஆக்கமும் அழிவும் பொருள் பொதிந்த கவி நன்றி ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொருட்பொலிந்த இக்கவியைப் போற்றிக் களித்தால்
      அருட்பொலிந்து ஓங்கும் அகம்!

      Supprimer

  6. தமிழ்வலை உறவுகளுக்கு வணக்கம்!

    ஆக்கக் கவிபடித்து ஊக்கக் கருத்தளித்தீா்!
    பாக்கள் படைத்த பயன்!

    RépondreSupprimer