சித்திர கவிதை
ஆறாரைச்
சக்கரம்
பாடுகிறேன்
பைந்தமிழே! பாரிதில் பீடுடவும்!
நாடுகிறேன்
நற்றமிழே! நன்மலர் - தேடி..மார்
சூடுகிறேன்
சொற்றமிழே! துாயவுன் பொற்கையாற்
பாடுநாள்
சூடும்சீர் பற்று!
அறுபத்தொன்பது
எழுத்துகளைப் பெற்ற நேரிசை வெண்பா, சக்கரத்தில் எழுதுங்கால் அறுபத்தோர் எழுத்துகளைப்
பெறும்.
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன்
கழகம் பிரான்சு
உலகத்
தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017

Aucun commentaire:
Enregistrer un commentaire