சித்திர கவிதை
முரச பந்தம்
கவிபாரதி சீரை மீட்டுகவே!
புவி..பாரதி சீரை நாட்டுகவே!
சுவைபாரதி சீரை யீட்டுகவே!
அவை..பாரதி சீரை யூட்டுகவே!
பாடல் விளக்கம்
மகாகவி பாரதியின் சீரை மீட்டுகவே! புவியே, பாரதியின் சீரை நாட்டி உயருகவே. இனிக்கும் கவிதைகளைப் படைத்த பாரதியின் சீரை ஈட்டுகவே. கவிபாடும் அவையே, பாரதியின் சீரை உலகுக்கு ஊட்டுகவே!
முரச பந்தமாவது, நான்கடிகளை உடையதாய் மேலிரண்டடியும் தம்முட் கோமூத்திரியாகவும், கீழிரண்டடியும் தம்முட் கோமூத்திரியாகவும் நாடா கட்டிய வழியில் முதலடி முதல் தொடங்கி இரண்டாமடியிலும் மூன்றாமடியினும், நான்காமடியினும் கீழுற்று மீண்டு மேலேபோய்க் கீழேயிறங்கி முடியவும், இவ்வாறே இறுதியடி முதல் தொடங்கி மேலேபோய்க் கிழேயிறங்கி மேலே போய் முடியவும் இரண்டாம் அடி முதலடியுடனும், மூன்றாம் அடி நான்காம் அடியுடனும் கோமூத்திரியாக எழுத்துக்கள் அமையப் பாடப்படுவதாகும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.12.2017
Aucun commentaire:
Enregistrer un commentaire