samedi 16 décembre 2017

கமல பந்தம் -


மலர்ப்பந்தம்
  
தேடுபாதை போடுதே! தேடுபோதை கூடுதே!
தேடு..கூனை மூடுதே! தேடுமூளை யோடுதே!
தேடுயோகு நாடுதே! தேடுநாவு சூடுதே!
தேடுசூலி கூடுதே! தேடுகூடு பாடுதே!
  
பாடல் விளக்கம்
  
சூலி - சூலப்படை தரித்த துர்க்கை
  
என் நெஞ்சம், துர்க்கையின் திருவருளை நாடிப் பாதை போடுகிறது. திருவடியைக் கண்டுகளிக்கும் ஆசை கூடுகிறது. அருளைத் தேடுகின்ற எண்ணம் வளர வளர என்னுயிர் கொண்ட கூன்[ஊழ்] ஒழிகிறது. ஊழ் அகன்றதால் அன்னையைத் தேடி மூளை ஓடுகிறது. மூளையுள் தாயின் உருப் பதிந்ததால் ஆழ்ந்த தியானம் என்னை நாடுகிறது. தியானம் கூடியதால் என் நாக்குத் தாயின் புகழைப் பாடுகிறது. தேடிய தேவி என் இதயத்தில் குடிகொண்டாள். தேடியலைந்த என் உயிர்க்கூடு அவள் பெருமையைப் பாடிக் களிக்கிறது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.12.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire