samedi 9 décembre 2017

சுழிகுளம்சித்திர கவிதை
சுழிகுளம்
  
கவிமக தா!தா! மாதே!
வியனரு மானே! தேமா
மனநவு வா!தே னே!தா!
கருவுரு நீ!வா! மாதா!
  
விளக்கம்
  
கவிமகளை எனக்குத் தா!தா! மாதே
வியக்கும் அருமை மானே!
தேமாபோல் மனம் நெகிழ வா! தேனே தா!
நான் பாடும் பாட்டுக்குக் கருவை உருப்பெறச் செய்பவள் நீ!
என் மனத்துக்கள் வருக என் தாயே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.12.2017   

Aucun commentaire:

Enregistrer un commentaire