வெண்பா
மேடை - 55
கட்டளைக்
குறள் வெண்செந்துறை
அளவில்
ஒத்த இரண்டு அடிகளாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கொண்டு வருவது குறள் வெண்செந்துறை
யாகும். [குறள் வெண்செந்துறையின் இலக்கணத்தை வெண்பா மேடை - 53 ல் காண்க] இரண்டடியிலும் எழுத்து எண்ணிக்கை ஒன்றி வருவது கட்டளைக்
குறள் வெண்செந்துறை எனப்படும். [ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ணுதல் வேண்டும்]
கட்டளைக்
குறள் வெண்செந்துறை
பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி
நுாறாயிரம்
மல்லாண்ட
திண்தோள் மணிவண் ணாஅ!உன்
செவ்வடி
செவ்விதிருக் காப்பு!
பெரியாழ்வார்
திருமொழி - 1
ஒற்று
நீக்கி இருபது எழுத்துகளை மேலுள்ள செந்துறை பெற்றுள்ளதைக் கண்டு மகிழவும்.
1.
கனிபோல்
கமழும் இனிய சொற்கள்
அணிபோல் என்றும் அழகை அளிக்கும்!
அடிக்கு
11 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.
2.
வாய்மை
வழியுள் வளரும் மனமே வளமேந்தும்!
துாய்மை
நெறியுள் சுடரும் மனமே சுவையேந்தும்!
அடிக்கு
15 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.
3.
பொன்னகை
பூண்டு பொலிவதிலும்
மின்னகை பூண்டு மிளிர்வதிலும்
பன்னகை
பூண்டு வருவதிலும்
புன்னகை யூட்டும் உயரழகு!
அடிக்கு
20 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.
4.
உள்ளொளி
ஏற்றி ஓதிடும் நாளில்
உருவொளி திருவொளி மேவிடுமே!
ஒள்ளொளி
உள்ளம் சொல்லொளி ஏந்தி
அறிவொளி அருளொளி சூடிடுமே!
அடிக்கு
22 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.
5.
எல்லோரும்
கற்றிங்கே ஏற்றங் காண
இன்சட்டம் நன்றாக இயற்ற வேண்டும்!
நல்லோரும்
வல்லோரும் நல்கும் வண்ணம்
நம்நாடு சீரேந்தி நடக்க வேண்டும்!
அடிக்கு
21 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.
கட்டளைக்
குறள் வெண்செந்துறை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர்
பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்செந்துறையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.12.2017
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.12.2017
விளக்கம் அருமை எளிமை!
RépondreSupprimerஅருமையான அழைப்பு
RépondreSupprimerஇந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஆங்கிலப் புத்தாண்(டு) அழகாய் மலரட்டும்!
பாங்குற நன்மை பரவட்டும்! - ஓங்கும்தமிழ்
உங்களால் வாழ்ந்திடட்டும்! ஒப்பற்ற ஆசானே
எங்களின் நல்வாழ்த்(து) இது!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
நான் கற்றவை மிகச் சிறிய அளவே!
மேலும் கற்றுத் தெளியக் காலம் துணை வரட்டும்.
நன்றிகள் பல!
வாழ்க வளமுடன்!