lundi 19 août 2013

மயக்கும் மாலை




மயக்கும் மாலை

எடுப்பு

அல்லும் பகலும் உன்நினைவு - என்
அன்பே என்றும் உன்கனவு!
                                                                      (அல்லும்)
தொடுப்பு

வெல்லும் என்னை உன்னுருவம் - மெல்லக்
கொல்லும் என்னை உன்பருவம்!
                                                                      (அல்லும்)
முடிப்பு

கவியெனை வாட்டும் பொன்விழியே - இன்
கனியினைக் கூட்டும் உன்மொழியே!
கவிதையை ஊட்டும் மின்னழகே - என்
கவலையை ஓட்டும் இன்றமிழே!
                                                                       (அல்லும்)
மாங்குயில் கொஞ்சும் சோலையடி - இது
மனத்தினை மயக்கும் மாலையடி!
பூங்கொடி படரும் சோலையடி - நெஞ்சுள்
பூத்திடும் இன்ப லீலையடி!
                                                                        (அல்லும்)

25.05.1982

5 commentaires:

  1. வரிகள் ஒவ்வொன்றும்
    நெஞ்சுக்குள் ஆனந்த ராகம் பாடுகிறது பெருந்தகையே...

    RépondreSupprimer
  2. மனதை மயக்க வைக்கும் வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...

    RépondreSupprimer
  3. தங்களின் பார்வைக்கு : பதிவர் சந்திப்பு திருவிழா 2013 - ஆதலால் பயணம் செய்வீர்

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

    RépondreSupprimer
  4. செந்தேன் மொழியில் தினம்பாட
    இந்தேன் அமுதம் இதுவென்பேன்
    வந்தேன் களித்தேன் வளங்கண்டேன்
    தந்தேன் மகிழ்வொடு வாழ்த்துமக்கே!

    RépondreSupprimer
  5. சிறந்த பா அடிகள்
    மறவா மரபு பேணும்
    அறிஞரின் அடிகள்
    எம்மைச் சிந்திக்க வைக்கிறதே!

    RépondreSupprimer