mardi 27 août 2013

என்னுயிரைத் தின்னுதடி!




என்னுயிரைத் தின்னுதடி!



எடுப்பு

மீண்டும் ஒருமுறை - உன்மொழி
வேண்டும் இளங்கொடியே!
தூண்டும் உணர்வலை - இவ்வுலகைத்
தாண்டும் மலர்கொடியே!
                                                      (மீண்டும்)

தொடுப்பு

தூண்டில் புழுவென - சின்ன
கூண்டில் கிளியென
ஈண்டு துடிக்கின்றேன்! - கண்ணீர்
மூண்டு வடிக்கின்றேன்!
                                                      (மீண்டும்)

முடிப்பு

எத்திசையும் உன்னுருவம்
முத்தாக மின்னுதடி!
எப்பொழுதும் உன்னினைவு
என்னுயிரைத் தின்னுதடி!
புத்தமுதக் கற்பனைகள்
பூத்தென்னைப் பின்னுதடி!
பூந்தமிழே! பொன்மழையே!
நற்புலமை மன்னுதடி!
                                                      (மீண்டும்)

25.08.2013

6 commentaires:

  1. கவிதை எங்கள் உயிரையும்...

    RépondreSupprimer
  2. அருமையான ஏக்க உணர்வுக் கவிதை!

    பெண்களின் ஏக்க உணர்வு ஒருவகையென்றால் ஆணின் உணர்வில் எப்படி இருக்கும் என அருமையாகப் பாடியுள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  3. ஏக்கம் இதென்றே எழுதிய பாடலும்
    தாக்கம் தருதே யெமக்கு!

    ஏக்கம் என்றால் இதுதான் என்ற பாடல்!


    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  4. சிறு ஐயம் ஐயா,
    தமிழ் மொழியா அல்லது காதலா எது உங்களை அதிகம் ஈர்ப்பது

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்மூளை என்றுரைப்பேன் இன்றமிழை! காதலை
      என்னிதயம் என்றுரைப் பேன்!

      Supprimer
  5. அன்பின் இனிய தாசரே!
    அன்னை தமிழின் நேசரே
    இன்புற நானும் ஊர்வந்தேனே
    இல்லில் நலமுற சேர்தேனே

    வாரம் முழுதும் ஓய்வாக
    வருந்திய உடலோ சாய்வாக
    நேரம் காலம் தெரியாமல்
    நிம்மதி உறக்கம் கொண்டேனே

    அலைந்து தேடி வந்தீரே
    அன்பைக் குழைத்து தந்தீரே
    வலைவழி அதனை தருவேனே
    வணக்கம்!நன்றி அனைவருக்கும்

    RépondreSupprimer