அன்பாம் அமிழ்தம்
அணியும் ஆடை அழுக்கானால்
அகற்றி
விடலாம் நம்பி!
மணியாம் உள்ளம் மாசானால்
மாற்ற
போமோ தம்பி?
பொய்மை பேசா திருந்தாலே
பொழியும்
வாழ்வில் இன்பம்!
உண்மை வழியே நடந்தாலே
உனக்கே
திங்கே துன்பம்!
அன்பாம் அமிழ்தைத் தினம்பருகி
அமைதி
உலவ வாழ்வோம்!
பண்பால் வாழ்வைக் கைப்பற்றிப்
பாரில்
நன்மை சூழ்வோம்!
02.01.1980
எளிமையாகச் சொல்லிப்போனாலும்
RépondreSupprimerஆழமான கருத்துடைய அற்புதமான கவிதை
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma
RépondreSupprimerபள்ளிக்குழந்தைக்கு பாடம் சொல்லும் விதமாக அமைந்த பாடல் அருமை ஐயா.
RépondreSupprimerஐயா வணக்கம்!
RépondreSupprimerமிகமிக இலகுவாக, இனிமையாக, அருமையாக உள்ளதே இப் பாடல்.
இது எவ்வகைப் பாடல் ஐயா?
இசைபோட்டுப் பாட வைக்கும் இசைப்பாடல் வகையோ?
சிந்தடி எனச் சொல்லலாமோ?
உங்களிடம் கற்கவேண்டுமென்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.
காத்திருக்கின்றோம் அனைவரும்!
பணிவான வனக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
அட அட என்ன ஒரு பாடல்... ! அற்புதம் கவிஞரையா!
RépondreSupprimerமெட்டுப்போட்டு பாடத் தோன்றுகிறது.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் செய்யாமல்
இருப்பது உனக்கே சரிதானோ...
இந்தப் பழைய சினிமாப் பாடல்
நினைவுக்கு வருகிறது.:)
ஓ!... 33 வருடங்களுக்கு முன்னே எழுதிய பாடலிதோ?
அருமைதான்! வாழ்த்துக்கள் கவிஞரே!
அற்புதமான கவிதை...
RépondreSupprimer