mercredi 28 août 2013

அன்பே கடவுள்




அன்பே கடவுள்

ஒழுக்கம் உன்பால் இருந்தாலே
     உயர்வு சேரும் தன்னாலே!
வழங்கும் நல்ல குணத்தலே 
     வளரும் வாழ்க்கை கொடிபோலே!

நன்மை செய்வீர் யாவர்க்கும்
     நாளும் நலங்கள் சூழ்ந்திடவே!
வன்மை யோடு வாய்மறையை
     வாழ்வில் பெறுவீர் வளமுறவே!

ஊறு பிறர்க்குச் செய்யாமல்
     உண்மை பேசி நின்றாலே
பேறு பலவும் பெற்றிடலாம்!
     பெருமை யாவும் உற்றிடலாம்!

மடமை இருளை ஓட்டிடுவீர்!
     வளரும் கலைகள் நாட்டிடுவீர்!
கடவுள் அன்பில் இருக்கின்ற
     கருத்தை நெஞ்சுள் ஏற்றிடுவீர்!

30.03.2013
 

4 commentaires:

  1. கருத்தை நெஞ்சுள் ஏற்றிட்டேன்
    நன்றி

    RépondreSupprimer
  2. மடமை இருளை ஓட்டிடுவீர்!
    வளரும் கலைகள் நாட்டிடுவீர்!
    கடவுள் அன்பில் இருக்கின்ற
    கருத்தை நெஞ்சுள் ஏற்றிடுவீர்!

    அழகான கவிதை..!

    RépondreSupprimer
  3. ஒழுக்கந் தருமே உயர்வுகள் நீங்கில்
    வழுக்குமே வாழ்கை விரைந்து!

    நற்செதிகள் நிறைந்த அருமையான கவிதை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  4. //ஊறு பிறர்க்குச் செய்யாமல்
    உண்மை பேசி நின்றாலே
    பேறு பலவும் பெற்றிடலாம்!
    பெருமை யாவும் உற்றிடலாம்!//

    எத்தனை உண்மையான வரிகள். உணர்ந்து வாழ்ந்தாலே இதைவிட சிறப்பில்லை.
    நல்ல கவிதை! ரசித்தேன்!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer