விழியும் மொழியும்
அவள்விழி கதைகள் சொல்லுமே - உளத்தில்
ஆசையாம் அலைகள் துள்ளுமே!
அவள்மொழி மனத்தைக் கிள்ளுமே - இந்த
அவனியை முழுதும் வெல்லுமே!
மீன்விழி அசைவில் நெஞ்சமே - அது
மீட்டிடும் இசையில் தஞ்சமே!
தேன்மொழி எதையும் விஞ்சுமே - பூந்
தென்றலே அவள்பால் கொஞ்சுமே!
மலர்முக அழகு போதுமே - மயக்கும்
மைவிழி உயிரை மோதுமே!
நிலவது பார்க்க ஏங்குமே - அவளை
நினைத்திட இன்பம் பொங்குமே!
11.07.1983
//மலர்முக அழகு போதுமே - மயக்கும்
RépondreSupprimerமைவிழி உயிரை மோதுமே!//
மையல் கொள்ளவைக்கும் வரிகள்...
வணக்கம
RépondreSupprimerஐயா
மலர்முக அழகு போதுமே - மயக்கும்
மைவிழி உயிரை மோதுமே!
நிலவது பார்க்க ஏங்குமே - அவளை
நினைத்திட இன்பம் பொங்குமே!
என்ன வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
// மலர்முக அழகு போதுமே - மயக்கும்
RépondreSupprimerமைவிழி உயிரை மோதுமே!
நிலவது பார்க்க ஏங்குமே - அவளை
நினைத்திட இன்பம் பொங்குமே!//
அழகு வரிகள்...
mmmm..
RépondreSupprimerrasanai ayya...
உங்களது வரிகளில் மனமும் தஞ்சமே...
RépondreSupprimerவாழ்த்துகள் ஐயா.... நன்றி...
நிலவது பார்க்க ஏங்கும்
RépondreSupprimerவிழியும் மொழியும் அழகு..!
விழிமொழியை
RépondreSupprimerமொழிவழி சொன்னவிதம் மிகவும் அருமை
ரசித்து மகிழ்ந்தேன்
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 4
RépondreSupprimerபச்சைக் கிளிமொழி பாடும் அவள்விழி
RépondreSupprimerமெச்சிட மேன்மை மிகும்!
கத்தியின்றி யுத்தமின்றி
RépondreSupprimerவெல்லுதோ விழியும் மொழியும்..:)
அழகு! அருமை! வாழ்த்துக்கள்!