நிலாக் கண்ணி!
1.
வெள்ளை மனத்தழகி!
பிள்ளைக் குணத்தழகி!
கொள்ளை இனிமையடி - நிலவே!
தொல்லை தனிமையடி!
2.
விந்தை விழியழகி!
முந்தை மொழியழகி!
சிந்தை செழிக்குதடி - நிலவே!
நிந்தை கழிக்குதடி!
3.
தண்மை முகத்தழகி!
உண்மை அகத்தழகி!
பெண்மை ஒளிருதடி! - நிலவே!
கண்மை குளிருதடி!
4.
பின்னல் சடையழகி!
மின்னல் இடையழகி!
கன்னல் படைக்குதடி - நிலவே!
இன்னல் துடைக்குதடி!
5.
அன்ன நடையழகி!
கன்னச் சுவையழகி!
எண்ணஞ் சிறக்குதடி - நிலவே!
வண்ணம் பிறக்குதடி!
6.
வேல்சேர் அறிவழகி!
பால்சேர் பணியழகி!
மால்போல் மயக்குதடி - நிலவே!
நுால்போல் மணக்குதடி!
7.
கொஞ்சும் உளத்தழகி!
விஞ்சும் வளத்தழகி!
நெஞ்சம் உருகுதடி - நிலவே!
மஞ்சம் பெருகுதடி!
8.
ஆடை மிளிரழகி!
ஓடைக் குளிரழகி!
வாடை தழுவுதடி - நிலவே!
மேடை குலவுதடி!
9.
முத்துச் சரத்தழகி!
பத்துத் திறத்தழகி!
பித்துப் பிடிக்குதடி - நிலவே!
சித்துப் படிக்குதடி!
10.
தண்டைக் கழலழகி!
கொண்டைக் குழலழகி!
கெண்டை தவழுதடி! - நிலவே!
மண்டை சுழலுதடி!
11.
முல்லை நலத்தழகி!
தில்லை நிலத்தழகி!
கொல்லை மலருதடி - நிலவே!
தொல்லை வளருதடி!
12.
தேன்தரும் சொல்லழகி!
வான்தரும் வில்லழகி!
கான்தரும் வாசமடி! - நிலவே!
மாண்தரும் நேசமடி!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
09.02.2020
வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerஅருமை. மரபுக் கவிதைகள் என்றாலும் எளிமையாக புரியும்படி இருக்கிறது. எழுத ஆசைதான். ஆனால் புதுக்கவிதை எழுதி பழகிவிட்டோம். என்ன செய்வது?
RépondreSupprimerநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்