samedi 30 mai 2015

திருவருட்பா முற்றோதல் அரங்கம் 13


13 commentaires:

  1. விழா சிறக்க வாழ்த்துகள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருட்பாவை அள்ளி அருந்துவதால் நம்மின்
      பெரும்பாவம் போகும் பிரிந்து!

      Supprimer
  2. மகளிர் அணியின் மனம்போல் அரங்கம்
    சிகரம் தொடட்டும் சிறந்து !

    அரங்க நிகழ்வுகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா !
    தம கூடுதல் ஒன்று

    RépondreSupprimer
    Réponses

    1. திருமதிகள் பேணும் திருவருட்பா மேடை
      அரும்நதிகள் காட்டும் அகத்து!

      Supprimer
  3. திருவருட்பா ஆன்மிக நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் பெருமை. சிறப்புக்கு சிறப்பு சேர்த்த கவிஞ்சருக்கு வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருட்பா அமுதை அனுதினம் உண்டே
      இருப்பார்க் கிலையே இடர்!

      Supprimer
  4. இவ்வாறான முற்றோதல் நிகழ்வுகளில் கிடைக்கும் இறையுணர்வும் நிம்மதியும் அலாதியானது. இவ்வகையான முற்றோதல்களை நான் கேட்டுள்ளேன். வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மூவாத் தமிழமுதை முற்றும் உணர்ந்திடவே
      நாவார நன்றே நவில்!

      Supprimer
  5. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்லதோர் செய்தியை நல்கினீர்! அன்பேந்தும்
      வல்லதோர் பாதை வகுத்து!

      Supprimer

  6. வள்ளல் வடித்த வளமார் தமிழுண்டால்
    உள்ளம் ஒளிபெற் றுயர்ந்திடுமே! - பள்ளமுறும்
    சாதி சமய சழக்கை விரட்டிடுமே!
    ஓதி மகிழும் உலகு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சாதி சமயச் சழக்குகளைத் தாம்சாடி
      ஆதி உணர்த்தும் அருட்பாவாம் - நீதிநெறி
      ஓதி மகிழும் உளத்துள்ளே ஞானமெனும்
      சோதி ஒளிரும் சுடர்ந்து!

      Supprimer
  7. எஞ்ஞான்றும் என் வாழ்த்துகள் தங்கள் அமைப்புகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உள்ளன :)

    RépondreSupprimer