samedi 7 juin 2014

பிரபுராம் பொன்விழா வாழ்த்து




தமிழன்பர் பிரபுராம் 
பொன்விழா வாழ்த்துமலர்

பீடுடைய நண்பர் பிரபுராம்! பூத்தாடும்
காடுடைய நற்பணிகள் காண்கவே! - பாடுகிறேன்
வாழ்கவே பல்லாண்டு! வண்ணத் தமிழாகச்
சூழ்கவே இன்பம் சுடர்ந்து!

பெருமை நிறைந்த பிரபுராம் வாழ்க
அருமை மனையாள் அகத்துள்! - பெருகிடும்
சீர்களைப் பிள்ளைகள் பெற்றுயர்க! பொன்விழாத்
தார்களைக் காண்க தழைத்து!

பெற்றோர் புகழ்சேர் பிரபுராம்! பூந்தமிழைக்
கற்றோர் புகழ்சேர் கனிமனத்தர்! - உற்றோர்
உவக்க உதவும் உயர்செயலர்! வாழ்க
சுவைக்கும் வளங்கள் சுரந்து!

பெருகும் அறஞ்சேர் பிரபுராம்! தொண்டில்
உருகும் உளத்தால் உயர்ந்தார்! - பருகிடும்
தண்ணீர் தமிழாகும்! தாங்கும் நினைவெல்லாம்
வண்ணத் தமிழாகும்! வாழ்த்து!

பேணும் நெறியார் பிரபுராம்! பொன்விழாக்
காணும் சிறப்புடையர்! கண்ணியர்! - ஆணேறாய்
வீரம் விளைக்கும் வியன்மறவர்! வாழ்க!தே
வார இசைபோல் மணந்து!

பேசும் இனிய பிரபுராம்! இன்பமுற
வீசும் நறுங்காற்றை விஞ்சுபவர்! - நேசகவி
கம்பன் கழகத்தைக் காக்கும் பணியாற்றி
நம்மின் உறவானார் நன்கு!

30.05.2014

12 commentaires:

  1. வணக்கம் !
    அருமையான வாழ்த்துப்பா ! இருவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  2. நெஞ்சம் இனிக்கும் நறுங்கவிதை நீர்பாடக்
    கொஞ்சு தமிழ்மடியில் கெஞ்சிவிழும் - பஞ்சத்தில்
    கட்டித்தேன் சொட்டப்பா கிட்டும்'என் றிட்டத்தால்
    எட்டுத்திக் குற்றல்'ஏன் என்று!
    = நல்ல மரபுக்கவிகளுக்குப் பஞ்சம் வந்துற்றதால் அவை தேடி எட்டுத்திக்கும் அலைந்த தமிழ்ப் பெண்ணாள், நறுந்தமிழ்க் கவிதைகளை நெஞ்சம் மகிழ நீங்கள் பாடுதல் கேட்டபின் இனிய தேன்சொட்டும் பா இனி இங்கே கிடைக்க , இதற்காக இனி எட்டுத்திக்கும் அலைய வேண்டியதில்லை என மனம் மகிழ்ந்தவளாய் மிகுந்த விருப்பத்தோடு, இன்னும் பாடுங்கள் என கெஞ்சி உங்கள் மடியில் கொஞ்சிக் கிடப்பாளாயினாள்.

    RépondreSupprimer
  3. பொன்விழா வாழ்த்து
    நாமும் தெரிவிக்கின்றோம்

    RépondreSupprimer
  4. வணக்கம்
    ஐயா.

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  5. பொன்விழா வாழ்த்துமலர் வெண்பாக்கள் மிக அருமை!

    வாழ்த்துக்கள் கவிஞரையா!

    RépondreSupprimer
  6. பிரபு ராம் அவர்களுக்கு பொன் விழா வாழ்த்துக்கள்
    தம 6

    RépondreSupprimer
  7. வாழ்த்துப்பா அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  8. வாழ்த்துக் கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
  9. உமது கவிதையை பாராட்டும் அளவுக்கு ''எமது'' போதாதய்யா தமிழ் சுவைத்தேன் அவ்வளவுதான்.

    RépondreSupprimer
  10. பிரபுராம் ஐயாவுக்கு அருமையான வாழ்த்துப்பா! என் வாழ்த்துக்களுக்கும் தங்களுக்கு.

    RépondreSupprimer
  11. ஐயா வணக்கம்!

    உள்ளம் மகிழ உயர்வான வாழ்த்திது!
    தெள்ளத் தெளிவான தேன்!

    மிக மிக அருமையான வெண்பாக்கள்!
    பிரபுராம் ஐயாவுக்கும் தங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  12. மரபுக் கவியில் பா வடித்த விதம் அருமை...

    RépondreSupprimer