அவன் மொழி
தொலைக் காட்சியைப்
போடு என்பேன்!
போட்டால்
உடைந்துவிடும் என்பான்!
எங்கள் வீட்டில்
தொலைக் காட்சி
ஓடவில்லை என்பேன்!
என்ன ஆனது - கால்
உடைந்து விட்டதா என்பான்!
தொலைப் பேசியில்
பேசுகிறேன் என்பேன்!
அப்படி என்றால் - நீங்கள்
வாயால் பேசவில்லையா என்பான்!
கவனம் என்பதை - நான்
கவணம் என்று எழுத
இருபொருட்பட
மூன்று சுழி ணகரம்
மிகக் கவனம் என்பான்!
உங்கள் வீட்டைத்
தேடுவது கடினமா என்றால்
ஆம்...
வீட்டைத் தேடுதல்
கடினம் என்பான்!
பொம்மைக்குச் சரியாகச்
சேலை கட்ட
தெரியவில்லை என்றால்
ஆம்.. ஆம்..- ,அது
பாரீசு பொம்மை என்பான்!
விழாவில் சேலையில்
பேசலாமா என்றால்
விழாவில்
ஒலி வாங்கியில்தான்
பேச வேண்டும் என்பான்!
முகத்தில் ஏன்
துண்டு
கட்டிக் கொண்டீர் என்றால்
நீங்கள் குசு குசு என்று
பேசுவதால் என்பான்!
நான் எழுதிய
குட்டிக் கவிதை
எப்படி இருந்தது
என்று கேட்டால்
குட்டிக் கவிதை
போதை அதிகம் என்பான்!
நீங்கள் ஏன்
குட்டிக் கவிதை
போடக் கூடாது
என்று கேட்டால்
நான் ஆண்
குட்டி போட
முடியாது என்பான்!
அரைக்கீரை
முள்ளங்கி
புளிக்குழம்பு
இரசம்
உங்களுக்குப் பிடித்த
சமையல்
சாப்பிட வாங்க என்பேன்!
முழுக் கீரை தரமாட்டாயா?
முள்ளங்கி...
முள் இல்லாமல் கிடைக்காதா?
புளிக்குழம்பில் போட்டது
குட்டிப் புலியா?
பெரும் புலியா?
இரசம்
ஈ... இல்லாமல்
கிடைக்காதா என்பான்!
சுவையான கவிபாடும்
நீங்கள்
தேனீ கவிஞர் என்றால்
நான் யாரையும்
கொட்டுவதில்லை
பின் எப்படித்
தேனீக் கவிஞர் என்பான்!
அவன் மண்டையில்
உள்ளது மூளையா?
அல்லது
செந்தமிழ்ச் சொற்கள்
செய்யும் ஆலையா?
வியக்கின்றேன்!
எப்படிப் பேசினாலும்
அவன்தான் வெல்கின்றான்!
உண்மை! உண்மை!!
அவன்
பாவளத்தில் வல்லவன்
என்றிருந்தேன்!
அவன்
நாவளத்திலும் வல்லவன் என்று
ஒவ்வொரு நாளும்
மெய்ப்பிக்கின்றான்! - ஆம்
என் மெய்மேல் மொய்கின்றான்!
10.06.2014
வணக்கம்
RépondreSupprimerஐயா.
கவிதையில் பாட்டுக்கு பாட்டு எதிர்ப்பாட்டு இசைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதையில் பாட்டுக்கு பாட்டு எதிர்ப்பாட்டு இசைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.
வணக்கம்
RépondreSupprimerஐயா
த.ம 3வது வாக்கு
எப்படிப் பேசினாலும்
RépondreSupprimerநீங்கள்தான் வெல்கிறீர்கள்!
உண்மை! உண்மை!!
அருமை...
RépondreSupprimerரசித்தேன் ஐயா...
வாழ்த்துக்கள்...
மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் ஐயா !
RépondreSupprimerவணக்கம் கவிஞரையா!
RépondreSupprimerஅட!.. அட!... அருமை!
வார்த்தை விளையாட்டு - ஜாலம் என்பது இதுதானோ?.. :)
மிகவே ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஇப்படிக் கவிதை எழுதுவதற்கும் எத்தனை திறமை வேண்டும்...
அற்புதம்!
சொற்கள் புதைந்துள்ள நல்லதோர் அகராதியேதான் நீங்கள் ஐயா!
சிலேடைக் கவிதை சிரித்தாலும் சிந்தி!
பலேபலே பெற்றிடுதே பார்!
வாழ்த்துக்கள் ஐயா!
எதுகையும், மோணையும் இதுதானோ ?
RépondreSupprimerwww.killergee.blogspot.com
மிக அஅருமை ஐயா. மரபுக் கவிதை உங்களிடம் மண்டியிடுகிறது என்றால் . புதுக் கவிதையும் புயலென புறப்படுகிறது உங்கள் பேனாவில் இருந்து.
RépondreSupprimerஅருமையான கவிதை
RépondreSupprimerபுதுக்கவிதையும் பூக்கள்
RépondreSupprimerதூவுகிறது உங்கள் பதிவில் ...
போட்டியாளர் யாரோ?