dimanche 7 juillet 2013

கட்டளைக் கலித்துறை





நக்கிப் பிழைப்போன்
[கட்டளைக் கலித்துறை]

அறமொழி நல்கும் அழகொளிர் வண்ணம் அரசமைய!
திறமொழி நல்கும் குறள்வழி ஏற்றுச் செயலமைய!
மறமொழி நல்கும் மதியொளிர் வாழ்வை மறுத்திடுவர்
பிறமொழி நக்கிப் பிழைப்பை நடத்திடும் பேதைகளே!

[நிரையசையில் தொடங்கும் கட்டளைக் கலித்துறை
ஒற்றுகளை நீக்கி எண்ணினால் அடிக்கு 17 எழுத்துக்கள் 
இருக்கும்]

06.07.2013

உயிரெனக் காப்பேன்

அன்னைத் தமிழே! அமிழ்தின் சுவையே! அருள்வடிவே!
முன்னை முகிழ்த்த முனிவன் வளர்த்த முதுமொழியே!
என்னை மயக்கும் எழிலாய் மிளிரும் இளையவளே!
உன்னை எனதார் உயிரெனக் காப்பேன் உவந்தினிதே!


[நேரசையில் தொடங்கும் கட்டளைக் கலித்துறை
ஒற்றுகளை நீக்கி எண்ணினால் அடிக்கு 16 எழுத்துக்கள் 
இருக்கும்]


14.04.1994 

11 commentaires:

  1. அன்னைத் தமிழே! அமிழ்தின் சுவையே! அருள்வடிவே!
    முன்னை முகிழ்த்த முனிவன் வளர்த்த முதுமொழியே!
    என்னை மயக்கும் எழிலாய் மிளிரும் இளையவளே!
    உன்னை எனதார் உயிரெனக் காப்பேன் உவந்தினிதே!

    கட்டளைக் கலித்துறை
    கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

    RépondreSupprimer
  2. யாப்பு கற்றுக்கொள்ள இங்குதான் வர வேண்டும்.

    RépondreSupprimer
  3. வணக்கம்.
    கட்டளை கலித்துறை பாடல்கள் அருமையாக உள்ளது.

    வாழ்த்துக்கள் கவிஞர்.

    RépondreSupprimer
  4. விளக்கங்களும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...

    RépondreSupprimer
  5. எப்படி அய்யா,,, இவ்வளவு இலக்கண நயத்துடன், யாப்பு இலக்கணப் படியே எழுதுகிறீர்கள்... என்னைக் கேட்டால் தங்களை நான் நவீன கம்பன் என்பேன் தங்களை...

    செம்மை'யாக உள்ளது...

    RépondreSupprimer
  6. அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  7. கட்டளைக் கலித்துறை
    கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

    RépondreSupprimer
  8. அறிந்தேன் ,மகிழ்ந்தேன் ,சுவைத்தேன்

    RépondreSupprimer
  9. கவிதைகளை இரசித்தேன். பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

    RépondreSupprimer

  10. எழுத்தெண்ணிப் பாடும் இனியதமிழ் யாப்பில்
    பழுத்த பழத்தைப் படைத்தீா்! - கொழுத்த
    கவிவளம்! கொள்கை கமழ்நலம் கொண்டீா்!
    புவிவளம் காணும் பொலிந்து!

    RépondreSupprimer