mardi 2 juillet 2013

நான் ஏன் பிறந்தேன்


நான் ஏன் பிறந்தேன்அன்னைத் தமிழின் அருளால் பெருகுமே
வண்ணம் கொழித்திடும் வாழ்வு!

வணக்கம் ஐயா!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
திருவரங்கன் திருவருளால் வாழ்வின் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று, உடலும் உள்ளமும்  உறுதியுடன் மனைவி குழந்தைகளுடன், பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்!

கவிஞா் வே.தேவராசு

கவிஞா் சரோசா தேவராசு

---------------------------------------------------------------------------------------------------------------------------------- 


அன்புடையீர், வணக்கம்.

அன்பு மனைவி, குழந்தைகள் தற்போது அருகில் இல்லை எனினும், அவர்களது அன்பு சூழ்ந்திருக்க, தங்கள் பிறந்த நாள் இனிதே விளங்க மனமார்ந்த வாழ்த்துகள்!

திருமதி சிமோன் 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

கவிஞர் பாரதிதாசனுக்கு வணக்கம்.

முதலில், பிறந்த நாள் நல்  வாழ்த்துகள்!
நல்ல நல்ல உடல் நலம்
நாளும் தளர்வறியா உள  நலம்
எல்லாம் வல்ல இறையருள்
நிறையப் பெற்று
நீடூழி வாழ்க!

இன்று காலை
சகோதரி குணா எம் இல்லம் வந்தது பெரு மகிழ்வு தந்தது!
கம்பன் கழகத்தையே கண்டார் போல் இருந்தது.
சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுச் சென்றார்கள்.
குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு
இன்னொரு நாள், விருந்துக்கு வருமாறு அழைத்தோம்.
ஏற்றுக்கொண்டார்கள்!

நன்றிகள்!

பேராசிரியா் லெபோ பெஞ்சமின்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பாமகள் கருணை பற்றிப் படந்தவன்!
நாமகள் கருணை நன்றே கிடைத்தவன்
காவியக் கம்பன் கவிகளில் கலந்தவன்
மேவிய புகழொடு மிளிர்ந்து வாழ்கவே!.

பாட்டின் வேந்தன்! பாவலர் காவலன்!
காட்டிய மரபுக் கவிதையைக் கண்டு
கூப்பிய கரமுடன் குளிர்ந்த மனத்துடன்
காப்பியக் கலையைக் கற்க வந்தோம்!

வல்ல அறிஞர் வளர்த்த தமிழை
நல்ல முறையில் நல்கும் கவியே!
சொல்லும் கவிதை சூழ்ந்த பகையை
வெல்ல வேண்டும் வீரம் விளைத்தே!

நாட்டம் கொண்டே நயமுடன் பயிலக்
கூட்டிய விருப்புடன் கூறிய செய்திக்கு
காட்டிய உங்கள் கருணையைக் கண்டே
மீட்டிய தேஇசை மனம்மிக மகிழ்ந்தே!

பாரதி  தாசனே! பைந்தமிழ் நேசனே!
சீருடன் செழிப்புடன் சிறந்து வாழ்கவே!

இளமதி - சா்மன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!என்னுயிர் இங்குப் பிறந்த எழில்நாளைப்

பொன்னணி சூடிப் புகழ்ந்துள்ளீா்! - அன்பொளிர

உள்ளம் உவந்தே உரைத்திட்ட வாழ்த்தினை

அள்ளி அணிந்தேன் அகத்து!கவிஞா் கி. பாரதிதாசன்

10 commentaires:

 1. வணக்கம் அய்யா... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... இன்று போல் என்றும் தாங்கள் கவிதை கூற நல்வாழ்த்துகள்....

  RépondreSupprimer
 2. வணக்கம் ஐயா!
  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
 3. கடல் தாண்டியும்
  கம்பன் புகழ் வளர்க்கும்
  தமிழ் காக்கும் தகையோரே
  நீவீர் வாழ்க.வளர்க

  RépondreSupprimer
 4. இன்பத் தமிழால் கவி பாடி
  இசையைப் போல வாழ்ந்திருக்க
  மிஞ்சும் புன்னகை மலர் தொடுத்து ¨
  மிதமாய் இங்கே வாழ்துரைத்தேன்

  அன்பர் தமக்குக் குறையாத இறை
  அருளும் பொருளும் பெருகிடவே
  இன்புற்றிருக்க வாழ்நாள் முழுதும்
  இந்த இளமையும் துடிப்பும் தொடரட்டுமே ...

  தமிழைப் போற்றும் சிரசுக்கு இத்
  தரணியில் என்றும் புகழ் நிலைத்திருக்க
  வருடும் தென்றல் காற்றே நீயும்
  வளமாய் வாழ வாழ்துரைப்பாய்

  கம்பன் அடிதனைப் பற்றியென்றும்
  கவிதை வடித்திடும் பாரதிதாசனே
  உன்றன் பிறந்த நாளென்றும்
  உலகில் தளைத்திட வாழ்த்துரைத்தேன்

  வாழ்க வாழ்க பல்லாண்டு என நல்
  வாழ்த்து என்றும் தொடரட்டுமே .....
  சூழ்க தமிழின் மொழியாற்றல்
  சூது வாது களைந்த நற் சுடரொளி போலே !....

  RépondreSupprimer
 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஐயா.

  RépondreSupprimer
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்து.
  அனைத்து நலமும் சூழ ஆரோக்கிய வாழ்வு பெறுக!
  வேதா. இலங்காதிலகம்.
  (வகுப்பு தொடங்கி விட்டீர்களா?. தெரியவில்லையே.)

  RépondreSupprimer
 7. என் மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!

  வளரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு
  பெருகட்டும் புகழ் சிறந்து!

  RépondreSupprimer
 8. ஐயா வணக்கம்!
  நேற்றுக் கண்ட பிறந்த நாளில்
  ஏற்றிய பாட்டதை இங்கே தந்தீர்
  வாழ்த்திய தகையோர் வரிசையில் எனதும்
  வாழ்த்தினை இணைத்தே வழங்கினை நன்றே!

  மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!
  நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புகழ் மற்றும் அனைத்தும் கிடைக்கப்பெற்று
  நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்!
  வாழ்க வளமுடன்!

  பெரிய கவிஞர்கள் வாழ்த்துடன் சிறு அணிலாகிய எனது வாழ்த்தினையும் இணைத்தது அதிர்ச்சியாக இருக்கிறது ஐயா!

  உங்கள் பெருந்தன்மைக்கு என் பணிவான நன்றிகள்!

  RépondreSupprimer

 9. நான்ஏன் பிறந்தேன் எனும்பதிவைக் கண்ணுற்றேன்!
  தேன்ஏன்? தினையேன்?உன் யாப்பிருக்க! - ஊன்ஏன்
  உருகுதோ உன்றன் உரைசுவைத்து! இன்..பா
  அருவியோ உன்றன் அகம்

  RépondreSupprimer