samedi 15 juin 2013

பேரழகி



பேரழகி

கற்பனை நல்கும் கட்டழகி!
கருத்தைக் கவரும் பொட்டழகி!
நற்றுணை யாகும் ஓரழகி!
நல்லாள் அவளே பேரழகி!

கண்ணைப் பறிக்கும் உடையழகி!
காற்றில் அசையும் இடையழகி!
என்னை மயக்கும் நடையழகி!
ஏக்கம் கொடுக்கும் சடையழகி!

வண்ணத் தமிழின் சொல்லழகி!
வானில் மிளிரும் வில்லழகி!
மின்னும் மணியாம் பல்லழகி!
விளங்கும் இளமை நல்லழகி!

17.01.1980 

17 commentaires:


  1. பேரழகுப் பெண்ணவளைப் பேணும் கவிபடித்துச்
    சீரழகு வெண்பாவில் செப்புகிறேன்! - ஊரழகு
    ஊட்டும் மலா்க்காடாய் ஒண்டமிழை உன்..கைகள்
    காட்டும் கவியே கவி!

    கவிஞா் இனிய.தமிழ்ச்செல்வன்
    மகாகவி பாரதியார் நற்பணி மன்றம் - மசி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பேரழகி! பேணும் பெருமைகளைக் காக்கின்ற
      சீரழகி! இன்பச் சிரிப்பழகி! - தேரழகி!
      கூரழகி! கொஞ்சுதமிழ்க் கூத்தழகி! பெண்ணிவள்போல்
      ஓரழகி உண்டோ உரை!

      Supprimer
  2. அழகியோ அழகி தமிழழகி
    பாரதிதாசன் பாட்டழகி
    பத்தொடு இரண்டுசேர் பேரழகி
    பாவினில் இனிக்கும் பண்ணழகி!..

    எத்தனை அழகிகள் ஐயா... அருமை!

    த ம 4

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தனியழகி! தங்கத் தமிழழகி! கன்னல்
      கனியழகி! கண்கள் கவி!

      Supprimer
  3. தங்கள் அழகுக் கவிதையும்
    அது கொடுத்த
    தாக்கத்தில் தொடர்ந்து வந்த கவிதைகளும்
    அருமையிலும் அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் வருகைதரும் நண்பரே! என்வணக்கம்!
      மூளும் கருத்தெல்லாம் முத்தென்பேன்! - தோளும்
      புடைத்தாடும்! என்புலமை பொங்கியெழும்! பாடல்
      படைத்தாளும் நெஞ்சம் பணிந்து

      Supprimer
  4. Réponses

    1. வணக்கம்!

      பேரழகுப் பெண்ணவளைப் பேணிநல் வாக்களித்தீா்!
      சீரழகுச் செந்தமிழிவ் தோ்ந்து!

      Supprimer
  5. பேரழகியை விளக்க
    ஓர் பேரழகுக் கவிதை
    நன்றி அய்யா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பேரழகுச் பெண்ணின் பெருமையை இங்குரைத்தேன்
      சீரழகுச் செந்தமிழில் சோ்த்து!

      Supprimer
  6. மனதை கவர்ந்த பேரழகி... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவா்ந்த அழகைக் கவியில் கலந்தேன்
      தவழ்ந்த நினைவுகளைத் தந்து!

      Supprimer
  7. உங்கள் கவிதைகள் அனைத்தும் ரொம்ப அருமை.

    நீங்கள் விருப்பபட்டால் அமர்க்களம் கருத்துக்களத்தில் உங்கள் கவிதைகளை பகிரலாம் உலக டமிளர்களுக்கு அறிய தரலாம்.

    அமர்க்களம் கருத்துக்களம்
    http://www.amarkkalam.net

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கருத்துக் களத்தில் கவிதைகளைத் தீட்ட
      விருப்பம் அளித்தேன் விழைந்து

      Supprimer
  8. எத்தனை அழகிகள்...ரசித்தேன்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மொத்த அழகையும் முத்தமிழில் நான்பாடிச்
      சித்தம் குளிர்வேன் சிலிர்த்து!

      Supprimer

  9. தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

    கன்னல் கவிபாடும் நற்கவிநான்! மின்வலைச்
    சன்னல் வழையாகச் சாற்றுகிறேன்! - என்னினிய
    செந்தமிழை உண்டு! சிறந்த கருத்தெழுத
    வந்தவரை வாழ்த்தும்என் வாய்!

    RépondreSupprimer