mercredi 12 juin 2013

இன்பம் தந்திடுவாள்!




வந்திடுவாள் ... இன்பம் தந்திடுவாள்

மத்தாப்பூச் சிரிப்பழகி - வண்ண
மயில்போல வந்திடுவாள்!
அத்திப்பூப் பேச்சழகி - நெஞ்சுள்
ஆசைகளைத் தந்திடுவாள்!

அன்னமென நடைநடந்து - என்றன்
அன்பரசி வந்திடுவாள்!
எண்ணமெலாம் இனிக்கின்ற - திகட்டா
இன்னமுதைத் தந்திடுவாள்!

வண்ணவுடை தானணிந்து - இளம்
வஞ்சியவள் வந்திடுவாள்!
கண்ணனிவன் மனம்மகிழ - இன்பக்
காட்சிகளைத் தந்திடுவாள் !

தண்ணீராம் குடமெடுத்து - நாளும்
தனிமையிலே வந்திடுவாள்!
பன்னீராம் மணங்கொடுக்கும் - இனிய
பைந்தமிழைத் தந்திடுவாள்!

சித்திரைபோல் சீர்மேவிக் - கமழும்
செந்தமிழாள் வந்திடுவாள்!
முத்திரைபோல் பதிக்கின்ற - பவள
முத்தங்கள் தந்திடுவாள்!

18.05.1980

10 commentaires:

  1. அவள் அழகை தங்கள் மூலம்
    நாங்களும் ரசித்து மகிழ்ந்தோம்
    மகிழ்வு தந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. என்னவொரு ரசனை ஐயா...! வாழ்த்துக்கள்... நன்றி...

    RépondreSupprimer
  3. தங்களின் பார்வைக்காக :

    காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!!

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Love-Special.html

    RépondreSupprimer
  4. வந்திவாள் வந்து தந்திடுவாள்
    இந்தமிழால் என்றும் இருந்திவாள்
    பொன்னெழுத்தால் பொறிக்கும் பாவழகில்
    செந்தமிழாள் மகிழ்வாள் செழித்து!..

    RépondreSupprimer
  5. ஐயா... எழுத்துப் பிழைகளுடன் கருத்துப்பதிவினை தந்துள்ளேன். மன்னிக்கவும்.
    இப்பொழுதுதான் பார்த்தேன் திருத்தமுடன்...


    வந்திடுவாள் வந்து தந்திடுவாள்
    இந்தமிழாய் என்றும் இருந்திடுவாள்
    பொன்னெழுத்தால் பொறிக்கும் பாவழகில்
    செந்தமிழாள் மகிழ்வாள் செழித்து!..

    RépondreSupprimer
  6. உங்கள் கவிதை மிகவும் அருமை ஐயா

    RépondreSupprimer
  7. அழகிய செந்தமிழாள் வாழியவே !

    RépondreSupprimer
  8. சித்திரைபோல் சீர்மேவிக் - கமழும்
    செந்தமிழாள் வந்திடுவாள்!
    முத்திரைபோல் பதிக்கின்ற - பவள
    முத்தங்கள் தந்திடுவாள்!

    இன்பத் தமிழோடென்றும் இணைந்திருக்க
    வாழ்த்துக்கள் ஐயா !!

    RépondreSupprimer