காதல் ஆயிரம் [பகுதி - 83]
786.
ஆளை அசத்தும் அழகே! கவிபாடும்
காளை மனத்தைக் கலக்குகிறாய்! - மாலைவரும்
வேளை கோல விழிப்பெண்ணே! போதையிலே
மூளை முழுகும் உருண்டு!
787.
நிறைந்திருக்கும்
வேலையிலும் உன்நினைவே நெஞ்சுள்
மறைந்திருக்கும்! மானே! மயிலே! - குறைந்திருக்கும்
மறைந்திருக்கும்! மானே! மயிலே! - குறைந்திருக்கும்
என்றன் துயரங்கள்! என்றென்றும் வேண்டுமடி
உன்றன் உயிரின் உறவு!
788.
என்மடல் ஏனோ? எனதுயிர் உன்னிடமே!
இன்மடல் தீட்டும் எழிற்கோவே! - பொன்மடல்
இன்மடல் தீட்டும் எழிற்கோவே! - பொன்மடல்
என்றன் திருமேனி! ஏந்திப் படித்திட..வா!
என்றும் இனிமை இசைத்து!
789.
தேன்குடிக்கும் பொன்வண்டே! தேகம் சிலுசிலுக்க
நான்குடிக்கும் நற்சுவையை
என்னென்பேன்? - வான்குடிக்கும்
நீரே மழையாகும்! நெஞ்சம் குடிக்கும்உன்
சீரே கவியாகும் சீா்த்து!
790.
ஏக்கம் நிறைந்ததடி! தூக்கம் தொலைந்ததடி!
தாக்கும் நினைவு தழைக்குதடி! - போக்கிட..வா!
தாக்கும் நினைவு தழைக்குதடி! - போக்கிட..வா!
வாக்களித்து நிற்கும் வறியவரைாய்க் காத்துள்ளேன்!
நாக்களித்துக் காதல் நடத்து!
(தொடரும்)




