ஆசிரியர் பொன்னாள் வாழ்த்து!
அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார்
நன்னூலும் வாழ்வியலும் பாடஞ் சொன்னார்!
நாள்தோறுங் கூழளித்து வன்மை தந்தார்!
பன்னூலும் அவருரையில் நடனம் ஆடும்!
பண்ணேந்திக் குயில்வந்து நன்றே பாடும்!
என்.. நூலும் இவ்வுலகில் மேன்மை காண
இனியதமிழ் யாப்பழகை முன்னே ஈந்தார்!
பொன்னூலும் புதுமலரும் கோடி சேர்த்துப்
புகழ்அரிய புத்திரர்க்கே இட்டேன் போற்றி!
அன்பு மாணவன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

Aucun commentaire:
Enregistrer un commentaire