samedi 5 septembre 2026

முனைவர் இரா. திருமுருகனார்

 

ஆசிரியர் பொன்னாள் வாழ்த்து!



இலக்கணச்சுடர்
முனைவர் இரா. திருமுருகனார்


பால்பொழியும் அருளாக என்றன் வாழ்வில்

          நூல்பொழியும் நல்லமுதை யளித்த அன்பர்!

வேல்பொழியும் அருளாக என்றன் வாழ்வில்

          வியன்றமிழின் பொருளமுதைக் கொடுத்த நெஞ்சர்!

மால்பொழியும் அருளாக என்றன் வாழ்வில்

          வான்பொழியும் தண்ணமுதைப் படைத்த வாணர்!

கோல்பொழியும் எழுத்தெல்லாம் கோலங் கொள்ளக்

          கொடுத்தபுகழ்த் திருமுருகர் நற்றாள் போற்றி!

 

 

அன்பு மாணவன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

Aucun commentaire:

Enregistrer un commentaire