ஆசிரியர் பொன்னாள் வாழ்த்து!
செவாலியே
இயலிசைப் புலவர் இராச. வேங்கடேசனார்
எட்டாறு வயதினிலே என்றன் பாக்கள்
எழிலோடு மின்னிடவே நுட்பம் சொன்னார்!
இட்டேரு நடப்பதுபோல் சொற்கள் செல்ல
இலக்கணத்தை உரைத்திட்டார்! இதயம் நின்றார்!
கட்டாறு கவியென்று தலைப்பைத் தந்து
கண்ணெதிரே வெண்பாவைப் பாட வைத்தார்!
பட்டாறு மலர்சாத்தி வணங்கு கின்றேன்!
பண்ணாறாம் இயலிசையார் நற்றாள் போற்றி!
அன்பு மாணவன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

Aucun commentaire:
Enregistrer un commentaire