samedi 5 septembre 2026

கவிஞர் தே சனார்த்தனனார்

 

ஆசிரியர் பொன்னாள் வாழ்த்து!

 


எந்தையார், நாட்டு விடுதலை வீரர்,

கலைமாமணியார்,

கவிஞர் தே சனார்த்தனனார்

 

ஈராறு வயதினிலே யாப்பை ஓதி

          இன்றமிழில் கவிபாடும் ஆற்றல் கூட்டிச்

சீராடும் எதுகையுடன் மோனை காட்டிச்

          சிறப்புடைய பாவலனாய் என்னை யாக்கிப்

போராடும் மனமூட்டிப் புவியை மாற்றும்

          பொதுவுடைமை நெறியூட்டிப் புகழே சூட்டி

யாரோடும் பகையின்றி வாழச் செய்த

          என்னுயிராம் ஆசிரியர் தே.ச. போற்றி!

 

அன்பு மாணவன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

Aucun commentaire:

Enregistrer un commentaire