ஆசிரியர் பொன்னாள் வாழ்த்து!
பண்டித வித்துவான்
நூற்கடலார் தி. வே. கோபாலையர்
அருமன்னைத் தமிழ்மொழியாள் கொண்ட செல்வம்
அத்தனையும் அகமுற்றார்! கற்றோர் உள்ளம்
பெரும்பொன்னைப் பெற்றதுபோல் இன்பங் காணும்
பேரறிஞர்! நூற்கடலார்! தேடி நாளும்
வருமென்னைக் கவிஞரென அழைத்தே என்னுள்
மழையாக மகிழ்வளித்தார்! ஐயம் தீர்த்தார்!
குரு..முன்னைத் தவமாகும்! கோபா லையர்
குவித்ததமிழ் காப்பாகும்! போற்றி! போற்றி!
அன்பு மாணவன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

Aucun commentaire:
Enregistrer un commentaire