ஆசிரியர் பொன்னாள் வாழ்த்து!
பாவேந்தரின் முதன்மை
மாணவர்
பாவலர்மணி சித்தனார்
மாலையிலே சித்தரிடம் பாடங் கேட்டு
மணக்கின்ற மரபுகவி எழுதக் கற்றேன்!
சோலையிலே இருக்கின்ற தன்மை போன்று
சுகமளிக்கும் இதமளிக்கும் அன்னார் சொற்கள்!
காலையிலே எழுகின்ற கதிரின் ஆற்றல்
கவியளிக்கும்! வரலாற்றை யறியும் வண்ணம்
ஓலையிலே தீட்டுகின்ற ஆக்கம் யாவும்
உணர்வளிக்கும்! உயர்வளிக்கும்! போற்றி! போற்றி!
அன்பு மாணவன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

Aucun commentaire:
Enregistrer un commentaire