mardi 9 juillet 2019

அறுமீன் சித்திர கவிதை   



அறுமீன் சித்திர கவிதை
  
மகரவொளியன் சபரி அன்பனைப்
பாடத் தமிழே வாராய்!
  
சந்தத் தமிழே! சபரியன் சீரை
வந்து பற்றுக! பேரை வாழ்த்துக!
வண்ண மணிதரி! வண்ணெண் ணமிங்களி!
மண்மணம் தோய வழங்கு மதியை!
தாயே! பாடும் நாவிலே உன்தாள்
நீயே நாட்டு நெஞ்சம் திகழ
நற்பா நல்கு! புகழே
பொற்பா ஓது! தா..மின் பூவே!
  
நடுவில் உள்ள விண்மீனில் 'சபரியன்பா' என்று வருவதைக் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.07.2019

1 commentaire:

  1. சித்திரத்திலேயே கவிதையைப் படித்துப் பார்த்தேன். புதுமையாக இருக்கிறதே! வெகு அருமை கவிஞரே!

    RépondreSupprimer