jeudi 11 juillet 2019

தேர் ஓவியக் கவிதை


தேர் ஓவியக் கவிதை
  
அன்பா லெனக்கு மரனே! அறிவோங்க
இன்பால் கொடு!பே ரெழிலே இடு..நீ!நற்
காவிய மாக்கவே! காவே! அருமுறவே!
நாவிருந் துாருறவே நல்கு!
  
வானவா! கவியானவா!
வானயா னுறஞானவா!
வானஞா யிறுதானவா!
வானதா திருவானவா!
  
வான்வெளியாக இருப்பவனே. என்றன் கவியாக ஆனவனே! வானத்தை யான் உணரவே ஞானமாய் இருப்பவனே. கதிரவனாய் ஒளிர்பவனே. வனத்தைப் போன்று விரிந்த பேரழகை உடையவனே.
  
தாயே!வா! நிறை தா!வேதா!
தாவே..தா! தண் பாலே..தா!
தாலே..பா! மின் வானே..தா!
தானே..வா பண் வாயே..தா!
  
தாயே வருக. நிறைவான வாழ்வைத் தருக. வன்மையைத் தருக. ஞானந்தரும் குளிர்ந்த பாலைத் தருக. உன் திருநாக்கே எனக்குப் பாட்டாகும். வைகுந்த வாழ்வைத் தருக. தானாகவே வரவேண்டும். உன்னைப் பாடுகின்ற வாயைத் தரவேண்டும்.
  
தேரின் அடித்தட்டிலிருந்து ஒவ்வொரு தட்டாகப் படித்து, தேரின் மேல் கும்பத்திருந்து கீழிறங்க வெண்பா நிறைவுறும். இரண்டு சக்கரங்களும் நான்காரச் சக்கர ஓவியமாக உள்ளன.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire