mercredi 24 juillet 2019

வேல் பந்தம் 5



வேல் சித்திர கவிதை - 6
  
வேலா..பார் வார்காவே!
வேதா..மார் வார்தாவே!
வேதார்வார் மாதாவே!
வேகார்வார் பாலாவே!
  
வார் - வார்த்தல்
தா - வலிமை
வேதார் - வேத்தை ஓதுபவர்
வேகார் - பொறாமை யற்றவர்
  
விளக்கவுரை - வேலவனே என்னைப் பாராய். பூஞ்சோலையை எனக்கு வார்க்க வேண்டும். வேதத்தை உடையனே வலிமையை என் மார்புக்கு வார்க்க வேண்டும். அன்னையாகக் காப்பவனே வேதத்தை ஓதுபவர்களை எனக்கு அளிக்க வேண்டும். என்றும் அழகிய இளமையை உடையவனே பொறாமை யற்றவர்களை எனக்கு அளிக்க வேண்டும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire