lundi 8 juillet 2019

மும்மீன் சித்திர கவிதை


மும்மீன் சித்திர கவிதை
  
காழ்வேன் பெருமுறுதி! கானந்..தா! செந்திருவே!
கார்மேனி மன்னனே! வாழ்வே..நீ! - சீரேநீ!
வான்மேகா! மீனேநான் தேறிட வாமனா!
கான்தேகா! வா!தேனே கா!
  
காழ் - மரவயிரம்
கா - காத்தல்
கான் - மணம், மலர்
  
கருத்துரை - உன்னிடத்தில் வன்மையாக உறுதிவைத்துள்ளேன்! செந்திருவே இசையை எனக்குத் த் தாராய்! கருமை நிறத்தைக் கொண்ட என் மன்னனே என் வாழ்வே நீ. நானுற்ற சீரே.. நீ. மழை தருகின்ற வான்மேகனே! வாமனனே! மலர்மணம் வீசுகின்ற மேனியனே! தேனே! இந்த மும்மீன் கவிதையை நான் எழுதிட, என்னைக் காக்க வாராய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.07.2019

1 commentaire:

  1. மீண்டும்... வெகு அருமை என்பதைத் தவிர வார்த்தை வரவில்லை. வியப்பாக இருக்கிறது.

    RépondreSupprimer